பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 37 காப்பாற்றுவதுபோல் அழகிய கேசங்களைத் துறந்து, உணவு ஒடுக்கி, கல்படுக்கையில் படுக்கும் விதவைத் துறவில் வாழ அனுமதித்தது. கிறித்துவ துறவறமும் கன்னித் துறவிகளுக்கு இடம் அளித்தது. ஆனால், மதம் பரப்ப ஆதிக்க பீடம் அமைக்கும் துறவு நெறிகள் இயல்பானவையாக இருக்க இயலாது என்பதைக் காலந்தோறும் போலித் துறவுகள் பெண்கள் உயிரைக் குடித்தும், அனாதைக் குழந்தைகளை உருவாக்கியும் நிரூபித்திருக்கின்றன. கருக்கலைப்பு என்ற பாவங்கள் பெண்களின் மீதே ஏற்றப் பட்டிருக்கின்றன. துறவு நெறி என்பது, பெண் வெறுப்பாகும் போது அது இயல்புக்கு மாறான போலித்தனமே. நம் காலத்தில் பகவான் என்று போற்றப்படும் இராமகிருஷ்ணர், துறவி அல்லர். தம் இருபத்திரண்டாவது வயதில் எட்டு வயதுச் சாரதையை மணந்தார். பக்தி மார்க்கத்திலும், ஞானமார்க்கத்திலும் அவர் காளி அன்னையின் தொண்டராகத் தாய்வழிப்பாட்டுத் தத்துவ விளக்கமாகவே விளங்கினார். சாரதாமணி தேவியார், தம் கணவர், பைத்தியக்காரர் போல் தட்சினேசுவரத்தில் உலக இயல்புக்கு ஒவ்வாத நடப்பில் திரிகிறார் என்று கேள்விப்பட்டுச் சொந்த கிராமத்தில் இருந்து புண்ணியத்தலங்களுக்குச் செல்லும் பக்தர்களான பயணிகளுடன் கணவருக்குச் சேவை செய்ய வருகிறார். ஆண், பெண் என்ற இருமை ஒன்றின்றி மற்றது முழுமையடையாது. இருள் - ஒளி - சுகம் - துக்கம் என்ற கூறுகள் இன்றைய அதிநவீன தொழில்நுட்பம் வரை இயங்கும் இருமைக் கூறுகள். ஆணில்லாமல் பெண்ணில்லை. முழுமை தாய்த் தத்துவம். சாரதாமணி அவரிடம் வந்து சேர்ந்தபோது, இளமையின் முழுப் பொலிவுடன் திகழ்ந்தாள். இராமகிருஷ்ணர், அவளை வரவேற்கிறார். ஒரு கணவருக்கு மனைவி செய்யக்கூடிய பணி விடைகள் செய்கிறாள். அமுது வடித்தல் உள்பட அவருடைய பூஜைக்குரிய வழிபாடுகளுக்குரிய அனைத்துப் பணிகளையும் செய்கிறாள். அவள் உள்நோக்கம் யாதாயிருக்கும்? மனைவியின் வடிவில் தாயையே அவர் காணலாம். ஆனால் அவள்? 'உனக்குப் போகம் வேண்டுமா, அம்மா? நான் உன் கணவன்; நீ நான் அப்படி இருக்க வேண்டுமாயின் உன் விருப்பம் தெரிவிக்கவேண்டும்” என்று வினவியபோது, அவள் கணவரின் வழிபாட்டுக்குரிய இலக்கைப் புரிந்து கொள்கிறாள். அவளையே தேவியாகக் கருதி அவர் பூசை செய்ய சாரதை அதே உணர்வில்