பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ துறவும்... 40 போல், ஒரு மூங்கில் கம்பைக் கொண்டு வந்து மனைவி ஒருபுறம் அதைப் பற்ற இவர் ஒருபுறம் பற்ற மூழ்கியபோது இருவரும் கம்பை விடுத்து ஒருவரை ஒருவர் பற்றி மூழ்க வேண்டும் என்று விதித்துக் காட்சி தந்ததாக வரலாறு. இந்த வரலாறு பக்தியைத் துக்கிக் காட்டுகிறதோ இல்லையோ, மனைவியின் எதிர்ப்பைப் பக்தனுக்காக இறைவன் தவிடுபொடி யாக்குகிறார். அதற்காக இறைவியுடன் காட்சி கொடுத்திருக்கலாம்! இதேபோல் இல்லை எனாத இயற்பகை நாயனார், சிவனடியார் கோரியபடி, தம் மனைவியைப் போகத்துக்காக வழங்கினார் என்பது இன்னொரு பக்தர் வரலாறு. இங்கே கற்பின் திண்மை பக்திக்கு எடுத்துக்காட்டாகிறது. அவளாகவே தன் உடலைக் கொடுப்பது, கீழினும், கீழான செயல். கண்டனத்துக்குரியது மட்டுமில்லை. சுண்ணாம்புக் காளவாயில் போட்டு நீறாக்குவதற் குரியது. யம உலகில் நெருப்புத் துணைக் காட்டி அணையச் சொல்வான் யமன்! எனவே கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருசன் என்பது மட்டுமல்ல. அவன் உன்னைப் பிறர் மனையில் ஊழியம் புரிய விற்றாலும், தலைகுனிந்து ஏற்றுக் கொள்; உன்னை வெட்டுவதற்கு முன்நிறுத்தி வாளை ஓங்கினாலும் மறுப்புக்காட்ட லாகாது; இவள் கற்பு, எல்லா உலகங்களிலும் எல்லாக் காலங்களிலும் புகழ் சேர்க்கும் இவளுக்கு. இந்தப் பண்பு காலம் காலமாக இவள் உருவாகும்போதே உள்ளுணர்வில் ஒர் அணுவாகப் பதித்து வைக்கப் பெறுகிறது. புலனடக்கம் என்பது, காவியை உடுத்திக்கொண்டு, தண்டு கமண்டலம் ஏந்தி மதகுரு என்று பீடமேறுவதால் எய்த முடியாதது. நூல்களைப் படிப்பதாலும் கொள்கைகளைப் பரப்புவதற்காகத் துறவி உடை தரித்துப் பிரச்சாரம் செய்வதாலும் பல மக்கள் அவரைக் குருவென்று போற்றுவதாலும் எய்த முடியாததொரு இலட்சியம்; மேன்மை, புலனடக்கம், மேலாம் அறிவு, ஞானம், படைப்பாற்றல் பெற இன்றியமையாத நெறியாகப் பண்டைச் சான்றோர் கண்டனர். இது இயல்பாக வருவதல்ல; சாதனையால் மட்டுமே எய்தக்கூடிய நெறி.