பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 41 புலனடக்கம் பெண்களை வெறுப்பதாலோ,போக உறுப்பு களைப் பழிப்பதாலோ, அவளைப் போகப் பொருளாக்கி, வாணிபத்தை அனுமதித்து, ஈடுபட்டு வீழ்த்திய பின்னோ, எய்தப்படும் பண்பு அல்ல. புலனடக்கம், ஆண் ஒவ்வொரு பருவத்திலும் வளர்த்துவரும் நற்பண்புகளின் சாரமாக மலரக் கூடியது. இயற்கை ஆணையும் பெண்ணையும் வெவ்வேறு தன்மைகளுடன் படைத்திருக்கிறது. ஆண் துாலமான வலிமை யையும் எழுச்சியையும் வெளிப்படுத்துகிறான். பெண்ணின் இயல்பு மென்மையானது. கட்டுக்கடங்காத கானகத் தியாய்க் கிளர்ச்சி கொள்ளக்கூடிய இயல்பை ஆற்று வெள்ளமாகப் புரண்டுவரும் பருவ ஓட்டத்தை, பெண் அரவணைத்துச் செல்பவள். தாயாய், தாரமாய், மகளாய், அவள் அவனை ஆற்றுப் படுத்தக்கூடியவள். மழலைகளுக்குத் தாய்மொழி கற்பிக்கும் ஆசிரியையாக, நோயுற்றபோது மருத்துவராக, செவிலியராக பெண்கள் அகிம்சையும் அன்பும் விளங்கப் பணியாற்றுகிறார்கள். அவர்களுடைய மூத்த அறிவும், அனுபவ விவேகமும், புதிய இடர்ப்பாடுகளில் சிக்கல் தீர்க்கப் பயன்படக்கூடும். ஆனால், ஆணின் ஆதிக்க மனப்பாங்கு அவளுடைய உடற்கூறியல், போகம், சந்ததி என்ற கூறுகளை மட்டுமே வைத்து அடையாளப்படுத்துகிறது. ‘என்னருகில் நீ; ஒரு மதுக் கோப்பை, இது போதும்’ என்று கவிதை இசைக்கும் ஓர் ஆண் உலகப் புகழ் பெறுகிறான். ஆனால், ஒரு பெண் இதுபோல் ஒரு கவிதை எழுதினால் 'கொண்டுவா அவளை! முச்சந்தியில் பெட்ரோல் ஊற்றி எரிப்போம்” என்று ஆதிக்கம் செலுத்துபவன் கொக்கரிக்கிறான். போலித் துறவுகள், பவுர்ணமி பூசையென்று பெண்களின் எலும்புகளை ஆசிரமங்களில் குழிதோண்டிப் புதைக்கின்றன. அனைத்து மோசடிகளுக்கும் காசாயம் கைகொடுக்கும் பாரத நாடு இது. மகாபாரத அருச்சுனனே காசாயம் பூண்டுதான் சுபத்தி ரையைக் கவர்ந்து மனைவியாக்கிக் கொண்டான்! அருச்சுனன், கண்ணனாகிய தேவனின் நண்பன். இராவணனோ, கற்பரசியைக் கவரக் காசாயம் பூண்டான்; அழிந்தான்! இந்தத் துறவு நியாயங்களில் பெண்களின் சுயமரியாதை மட்டுமல்ல, அவள் இருத்தலே பலியாகிறது!