பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 43 மறுமலர்ச்சிப் புரட்சிக் கருத்தைத் தோற்றுவித்த அறிஞர் ஹாவலாக் எல்லிஸ் போன்றவர்கள் பழைய மரபுகளை உடைக்கும் திறந்த சிந்தனையாளர் கூடிப் பேசும் வாய்ப்புகள் இருந்தன. மால்தசின் மக்கள் பெருக்கத் தடைக் கருத்துக்கள் சூடுபிடித்திருந்தன. பெண் விடுதலைக் கிளர்ச்சியின் ஒரு முக்கிய கூறாகவும் அக்கொள்கை அமைந்தது. இங்கிலாந்தின் தேசிய பொருளாதாரத்தில் அக்கறை கொண்டு அவர், பொருளாதாரம் நலிவடைந்ததற்கு மூன்று கூறுகளைச் சுட்டிக் காட்டியிருந்தார். அதிகமாகக் குழந்தைகள் பெறுவது; அவற்றை நன்கு வளர்த்துச் சிறந்த குடிமக்களாக்கு வதற்குத் தேவையான வாழ்வாதாரங்களைத் தேட இயலாமை. எனவே அடித்தள மக்களின் குடும்பங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவர்களால் தாங்கமுடியாத - வளர்க்க இயலாத குடும்பத்தைப் பெருக்கக்கூடாது; தடுக்க வேண்டும். காலம் காலமாகப் பெண்ணே குடும்பத்துக்கு உணவு வழங்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறாள். ஆண் குடித்துவிட்டு வருவதும், ஊதியத்தை அவளிடம் கொடுக்காமலேயே அவளைப் பிள்ளை பெறும் கருவியாக்குவதும் நிகழ்ந்தன. உலகெங்கும் வறுமையும் நோஞ்சான் குழந்தைகளும் நலிந்து சோர்ந்த பெண்களுமே, மால்தஸின் மக்கள் பெருக்கக் கட்டுப்பாட்டு விதிகளை நடைமுறைப்படுத்த எழுச்சி கொள்ளக் காரணங்களாயமைந்தன. கத்தோலிக்க மதமோ, வேறு எந்த மதமோ கருத்தடைக்கு ஆதரவு காட்டக்கூடியவை அல்ல. கருத்தடைக்கு ஆதரவான மால்தஸின் கொள்கை சமத்துவத்தின் அடிப்படையில் அமையவில்லை. என்றாலும், பெண், பிள்ளை பெறும் கருவியாக வறுமையி லிருந்தும், அதிக மக்களைப் பெறும் பொறுப்பிலிருந்தும் விடுபட கருத்தடை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற பொறியை ஊதிவிடும் முயற்சியில் ஈடுபட்டவர், பின்னாட்களில் இந்திய விடுதலையை இலக்காக்கி ஹோம் ரூல் இயக்கத்தைத் தோற்றுவித்தவரும் பிரும்மஞான சங்கத்தின் முன்னோடிகளாக இருந்தவர்களில் ஒருவருமான ஆனி பெசன்ட் அம்மை ஆவார். சமயத்துக்கு எதிரான கருத்தைப் பிரசாரம் செய்ய இவர் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து வழங்கி மக்கள் கூடுமிடங்களில் கருத்தைப் பரப்பினார். சமய போதகரான பெசன்டிடமிருந்து மணவிலக்குப் பெற்றார். இவருடன் முக்கிய ஆதரவாளராக இருந்தவர் சார்லஸ் பிரெட்லா என்பவர். இவரும் பிரும்ம ஞான சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் முக்கியமானவராவார். கருத் தடைப் பிரசார அறிக்கைகள், நூல்களைப் பிரசுரித்தவர் கைது