பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ மக்கள்... 44 செய்யப்பட்டார். வழக்கு நடந்தது. ஆனால், கருத்தடை குறித்து ஆதரவான கருத்துக்களை அச்சிட்டுப் பிரசுரித்தது தவறில்லை என்று தீர்ப்பு வந்ததும் அச்சிட்டவர் விடுதலையானார். ஆதரவாளர் மேலும் ஊக்கமடைந்தனர். அந்தக் கால வழக்கில் அரசல் பொர சலாக இலைமறை காய்மறையாக இருந்த கருத்தடை சாதனங்களை மருத்துவ ரீதியாகச் செயல்படுத்த, அந்நாட்களில் லண்டன் மாநகரில் பிரபல மருத்துவராகத் தொழில் புரிந்த டாக்டர் ஆல்பட் என்பவர் தொழில் செய்வதைத் தடை செய்ய மருத்துவர் பதிவேட்டில் இருந்தே பெயர் நீக்கம் செய்யப்பட்டார். 1878 இல், மால்துசியன் அணி என்ற அமைப்பே தோன்றியது. ஆனி பெசன்ட் அதன் செயலாளர். இவ்வாறு தொடக்கக் காலத்தில் கருத்தடை என்ற சொல்லே இயற்கைக்கும், தெய்வ நம்பிக்கைக் கும், எதிரானதாக எதிர்க்கப்பட்டது. என்றாலும் எதிர்ப்புகளுக் கிடையே கருத்தடை என்பது, மக்கள் பெருக்கத்தைக் கட்டுப் படுத்த மட்டுமின்றி பெண் விடுதலையின் முக்கியக் கூறாகவும் வலுப்பெற்றது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்கப் பெண் விடுதலை வரலாற்றில் கருத்தடை உரிமைக்காகப் போராடியவர் மார்கரெட் ஸாங்கர் என்ற பெண்மணி. இவர் நூற்றுக்கணக் காகவும், ஆயிரக்கணக்காகவும் வெவ்வேறு மொழிகளில் சிறு குடும்ப அவசியத்தை வலியுறுத்த அறிக்கை பதிப்பித்து அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பாவிலும் வழங்கினார். 'பெண் புரட்சியாளர் என்ற பத்திரிகையைத் தோற்றுவித்து மகளிர் இயக்கத் தையே உருவாக்கினார். 1916ம் ஆண்டு ப்ருக்லின்ஸ் (நியூ யார்க்கில்) முதல் கருத்தடைக்கான மருத்துவ இல்லத்தை நிறுவினார். 1923 இல் இதற்கான ஆராய்ச்சிக்கான அணியும் தொடங்கப்பட்டது. இந்த அணியின் தலைவியாக மார்கரெட் லாங்கரே இருந்தார். 1927 ஆம் ஆண்டு ஜினிவா நகரில் உலக மக்கள்தொகை மாநாட்டைக் கூட்டினார். 1930 இல் ஜூரிச்சில் இதற் கான மருத்துவ ஆய்வாளர் மாநாடும் நடந்தது. இந்த மாநாடுகளில் பல்வேறு கருத்தடை முறைகள் பற்றிய கட்டுரைகள் வெளிவந்தன. டாக்டர் மேரி ஸ்டோப்ஸ் அம்மை, இங்கிலாந்தின் கருத்தடை இயக்கத்தைப் பரவச் செய்த முன்னோடிகளில் முக்கியமானவர். இவரும் இவருடைய கணவரும், லண்டன் மாநகரில் கருத்தடை செய்து கொள்வதற்கான மருத்துவ இல்லம் ஒன்றை 1925 இல்