பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 45 நிறுவினார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மேலை நாடுகளில் அதிகமான கருத்தடைக்கான மருத்துவ இல்லங்கள் தோன்றின. பாலியல் சார்ந்த சீர்திருத்தங்களைக் கொள்கைகளாகக் கடைப்பிடிக்க ஒரு குழுவே தோன்றியது. அதன் உறுப்பினர்கள் ஐரோப்பிய நாடுகளில் பெருமளவு நிதிகள் திரட்டி இதற்கான மருத்துவ இல்லங்களை நிறுவினார்கள். 1962 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் திட்டமிட்ட பெற்றோரின் உலக சம்மேளனம் அமைந்தது. இதன் தலைவர் டாக்டர் ஆலன் பிரசித்தி பெற்ற மகப்பேறு மருத்துவராவார். இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலங்களில் 'கருத்தடை’ப் பிரசார இயக்கம், மகளிர் உரிமைகள், எல்லாமே எல்லா நாடு களிலும் சூடுபிடித்தன. மக்கள் தொகைப் பெருக்கம், உணவு போன்ற இன்றியமையாத வாழ்வாதாரங்கள் குறித்த விழிப்புணர்வு குறித்த நடவடிக்கைகள் தொடர்பாகவே அணுகப்பட்டது. ஆனால், மக்கள்தொகைப் பெருக்கம் பெண்ணால் மட்டுமே ஏற்படுவது போலும், கட்டுப்படுத்துவதும் கட்டுப்படுத்தாததும் அவள் பொறுப்பில் அமைந்திருப்பது போலும் இந்தப் பிரச்னை அணுகப்பட்டது. நூற்றாண்டுகளில் பெண்ணுக்கு உயிர் மீதும் கருப்பைச் செயல்பாட்டின் மீதும் உள்ள உரிமைகளைப் பறித்து அவளை அந்நியப்படுத்திய மனநிலையில்தான் அவள் முன்னின்று.இந்த இயக்கத்தைக் கையிலெடுத்துச் சென்றாள். தொடக்ககாலக் கருத்தடை சாதனங்கள் அனைத்தும் பெண்ணு டலையே சோதனைக் களங்களாக்கி இருக்கின்றன. இந்த வரலாறு, நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடரப் பட்டதாகத் தெரிகிறது. பூவரசம் பட்டையை அரைத்துத் தயாராக்கிய விழுதை மேற்பூச்சாகப் பயன்படுத்தலாம் என்ற கருத்தடைச் சாதனம், புராதன எகிப்திய பாப்பிரஸ் எழுத்துக்களால் தெரியவருகிறது. கிரேக்க தத்துவ ஞானியரான அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்றவர்கள் இரண்டாயிரத்து நானுறு ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, கருக்கலைப்பையும் சிசுக் கொலையையும் பரிந்துரைத் திருக்கின்றனர். ஈயம், வாசனையுள்ள மர எண்ணெய் போன்ற கலவைகள் பெண்ணுக்கு அந்நாட்களில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகின்றன. 1300 ஆண்டுகளுக்கு முன் சீனத்தில் இதற்கான