பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ மஅக்கள்... 45 வரலாறு தொடங்குவதாகக் காணப்படுகிறது. புராதன இந்தியாவில் காமசூத்திரம் கண்ட வாத்ஸ்யாயனர் (நான்காம் நூற்றாண்டு) தம் நூலில் செந்தாமரை, பனங்கருப்பஞ்சாறு போன்ற தாவரக் கரைசலை வாய்வழி உண்ணுவதைப் பரிந்துரைப்பதாகத் தெரிகிறது. மகளிர் உரிமைகளுக்கான போராட்டத்தில் ஆணின் விந்தனுக்களின் கொள்கலனாக இருக்கும் கருப்பைச் செயல் பாடுகளைப் பிரசவம், உழைப்பு, உடல் நலிவு, மரணம் ஆகிய வற்றைத் தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவதான நோக்கமே இருந்தது. ஆனால், ஆணாதிக்கம் அந்த நோக்கத்தையே எதிர்த்தது. பெண் அந்த வகையில் விடுதலை பெற்றாளா? விடுதலைக்கான வழிகளில் அவள் அழிக்கப்படுவதுதான் நிகழ்கிறது. இடைக்கால இஸ்லாம், ஒரு பெண் அவள் விரும்பினாலன்றிக் குழந்தை பெறு வதை வலியுறுத்தலாகாது என்ற கருத்தை ஆதரித்தது. - அராபிய சமுதாயத்தில் அக்காலத்துப் புகழ் பெற்ற பாரசீக மருத்துவர் (அபுபக்கர் அல்ஜி) மருத்துவத் தொழிலில் கருத்தடை என்பது யாவரும் ஒப்புக் கொள்ளக்கூடிய நேர்மையான அம்சம் என்று கருதினார். இயற்கையான தடுப்பு முறை இது. பெண்கள் ஆண் விந்து வெளியாகும் கணத்தில் தன்னைப் பின்வாங்கிக் கொள்வதாகும். இதற்கு இருவரும் ஒத்த மனதுடையவராக இருக்க வேண்டும். இன்னொரு முறை - நன்கு கழுவிச் சுத்தம் செய்து கொள்வதாகும். முதல் ஆணுறையைப் பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் மன்னர் (இரண்டாம் சார்லஸ் மன்னர்) அவையில் மருத்துவராக இருந்த டாக்டர் காண்டம் என்பவரே, ஆட்டின் மெல்லிய சவ்வுத் தோலிலிருந்து தயாரித்தார் என்று தெரிகிறது. இன்றும், அதே பெயர் ஆணுறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சோவியத் யூனியனிலும், ருமேனியா, ஹங்கேரி, போலந்து, பல்கேரியா ஆகிய நாடுகளிலும் கருக்கலைப்புகளே முதன்மை பெற்றிருக்கின்றன. சோவியத் யூனியனின் சில குடியரசுகளில் பிறப்புகளுக்குச் சரியான அளவில் கருக்கொலைகளும் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. (பெண்கள் தங்கள் உரிமைகளை இவ்வாறு வெளிக்காட்டிக் கொண்டார்களோ?) மருத்துவ இல்லங்களில் பெண்கள் கருவுறாமலிருக்க வேறு