பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தப் புத்தகம் . கிட்டத்தட்ட ஒரு வருடமாய் வாரம் ஒரு முறை சுமார் அரைமணி நேரம் திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் பேசுவார். அந்த உரையாடலில் 25 நிமிடங்கள் தான் எழுதிவரும் கட்டுரைநூலைப் பற்றி - மக்கள் தொகைப் பெருக்கக் கட்டுப்பாடு நடவடிக்கைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து வெகு கொந்தளிப்பான மனதுடன் பேசுவார். உலக அளவில் இப்பிரச்சனை எப்படியெல்லாம் பிரதிபலிக்கிறது - நமது நாட்டில் குறிப்பாகத் தென்னகத்தில் - எப்படிப் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆதங்கத்துடன் பேசுவார். கொள்கை - திட்டம் - செயல்பாடு - செயல்பாட்டின் சாதக பாதகங்கள் என்று தெளிவாக - ஆனால் உறுதியான பெண்கள் பாதிப்பு' என்கிற அடிநாதமான அக்கறையுடன் - சமூக அக்கறையுடன் படைப்பாளியாகவும் இவ்விஷயம் பற்றி உழைத்து உருவாக்கியுள்ளார் இந்தப் புத்தகத்தை. குடும்பக் கட்டுப்பாடு சாதனங்கள், அறுவைச் சிகிச்சை, நவீன முறைகள் என்றும் அதே சமயம் குடும்பக் கட்டுப்பாட்டுச் சாதனம் பொருத்தப்பட்டதன் விளைவுகளையும் உயிர்ச் சேதங்களையும் பற்றியும் அடிக்கடி செய்தித்தாள்கள் விவரிக்கின்றன.