பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்மையில் இயற்கைப் பேரழிவுச் சீற்றமான சுனாமி பாதிப்பினாலும் கும்பகோணம் தீ விபத்தில் குழந்தைகளிை ஒரே குழந்தையையும் பறி கொடுத்த சோகங்களையும் மீண்டும் கருவுற வாய்ப்பில்லா நிலையை எண்ணிப் பலர் கலங்குவதை' காசி உணர்ந்தோம். ஒரு நாட்டின் வளம் என்பது இயற்கை வளம் மட்டுமல்ல, மனித வளமுமே என்பதை உணரவும் உணர்த்தவும் தேவை அதிகரித்து வரும் சூழல் இது ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்கிற பிரச்சாரமும் செயல்படுத்தத் துண்டி வெற்றி காண்கிற சூழலிது. பிரச்சனைகளை மட்டும் அலசாமல் தீர்வையும் இறுதியில் மெல்லிய குரலில் - தீர்க்கமாக ஒலிக்கும் நூலிது. சமூகப் பொருளாதார அக்கறை என்பதில் நாம் தனிநபர் சுதந்திரத்தை எந்த அளவிற்கு மதிக்க வேண்டும் " ன்பதைத் தெளிவாகக் கூறும் அதே சமயம் சுயக்கட்டுப்பாடே சிறந்தது என்பதையும் உறுதியாகக் கூறுகிறது இப்புத்தகம் நாட்டின் மீதும், மக்கள் மீதும் அக்கறை கொண்ட ஒரு படைப்பாளியின் இக்கருத்துகளை அதே படிநிலையில் வாசகர்களும் பகிர்ந்து கொள்ள உதவும் நூலிது. கனமான - சிக்கலான இந்த விஷயத்தையும் கடச் சுவை குன்றாமல் சொல்ல முடிந்த படைப்பாற்றல் பெற்ற திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு எமது நன்றி. நூல் உருவாக்கத்தில் தொடர்ந்து அவருக்கு உதவிய இனிய நெஞ்சங்கள் அனைத்திற்கும் எமது நன்றி. உங்கட்கும். - தாகம்