பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ சமுதாய... 48 கிறார்கள். ஒரு குழந்தை போதும் என்று மக்கள் தொகைக் கட்டுப் பாடு நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது. பொருளாதாரம் சார்ந்து செஞ் சீனம் பல புரட்சிகர மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. ஆனால், பிறந்தது பெண் குழந்தை என்றால், வாளி நீரில் அமுக்கிக் கொல்லும் புதிய மரபுகள் தோன்றியிருப்பதாகச் செய்திகள் பொசிகின்றன. குடும்பக் கட்டுப்பாட்டில் பெண்ணே பலி யாகிறாள். சோவியத் ஒன்றியத்தில், குழந்தைகளே நாட்டின் எதிர் காலம் என்ற வாசகங்கள் எங்கு நோக்கிலும் காணப்பட்டன. இரண் டாம் உலகப்போரில் மிக அதிகமான மக்களைப் பலி கொடுத்த நாடு. மகளிர் உரிமைகள் அரசியல் சாசனத்திலேயே பதிவு பெற்றிருந்த தாகச் சொல்லப்பட்டது. மகளிர் உரிமைகள் என்பவை எந்தெந்த அம்சங்களைக் குறித்தன? தனி நபர் உரிமைகள், மனித உரிமை களின் கீழ் வரக்கூடியவை. சமய வழிபாட்டுத்தலங்கள், கலாசாரம் சார்ந்த கண்காட்சித் தலங்களாகவே கருதப்பட்டன. ஒவ்வொரு பெண்ணும், தன் இயல்புக்கேற்ப உணர்ச்சிமயமானவள். து.ாலமாகப் பெண்ணுக்குக் கல்வி, வேலை செய்யும் உரிமை, மக்களை வளர்க்கும் உரிமை, காதலிக்கும் உரிமை, தான் விரும்பிய ஆணை மணந்து மகவைப் பெற்றுக் கொள்ளும் உரிமை என்று பெண்ணின் உரிமைகள் பலவும் ஒரு பொதுக் கொள்கையுடைய அரசில் சிக்கலாகிப் போவதை மறுக்க முடியாது. சமயம் சார்ந்தோ சாராமலோ கடவுள் வழிபாடு பொதுவுடமைக் கொள்கைக்கு முரணானது. அந்த நடைமுறை ஆட்சியில் வெளிப்படையான விவரங்கள் இருக்கவில்லை. ஆசியக் குடியரசைச் சார்ந்த நாடுகளில் பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர். அங்கே ஒவ்வொரு தாயும் ஐந்தாறு குழந்தைகள் பெற்றிருந்தார்கள். அதிகமான குழந்தைகள் பெற்றவர்களை ‘விரத்தாய்' என்று விருது அளித்தும் கவுரவித்தார்கள் என்ற செய்திகள் வெளியிடப்பட்டன. சோவியத் ருசிய நாடுகளில் இரண்டு மூன்றுக்கு மேல் பெற்றுக் கொள்வதைத் தாயர் விரும்பவில்லை. காரணங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கப் படவில்லை. ஆனால் சோவியத் ஒன்றியம், பொதுவுடமை நெறி களை விட்டுச் சீட்டுக்கட்டுகளாகக் குலைந்தபின், பல செய்திகள் வெளிவந்தன. பெண்கள், வீடு, கோயில் என்ற எல்லைகளுக் குள்ளிருந்தும் வெளிவந்து, புதிய காற்றை, புதிய வெளிச்சத்தை, புதிய சுதந்திரங்களைப் பெறவேண்டும் என்று போராட்டங்கள் நிகழ்த்தினோமே, அதே எல்லைகளுக்குள் மீண்டும் சிறைப்