பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 49 படலாமா? என்று ஒரு பெண்மணி புலம்பி இருந்தார். அதற்குத் தந்த விடைகள், அதிர்ச்சிகரமாக இருந்தன. "நாங்கள் என்ன வேலை செய்தோம்? ஆலைகளிலும், தொழிற் சாலைகளிலும், முரட்டுச் சீருடை அணிந்து உழைப்பை அளித்தோம். ஆண்கள் எங்களைக் கண்காணிக்கும் மேலாண்மைப் பதவியில் இருந்தார்கள். வீடுகளிலும், வந்து நாங்கள் பணி புரிந்தோம். அவர்கள் தொலைக் காட்சி பார்த்தார்கள். எங்களை வண்ணங்களுடன் அழகு செய்து கொள்ளவும், எங்கள் குழந்தைகளுடன் நேரம் போக்கவும், ஆபத்துக் காலத்தில் உணர்ச்சிமயமான கடவுள் வழிபாடுகளில் ஈடுபடவும் எங்களால் முடிந்திருக்கவில்லை. இப்போது தான் நாங்கள் உரிமைகளைப் பெற்றிருக்கிறோம். சமத்துவம், பொதுவு டமை எல்லாம் மலை உச்சியில் தென்படும் ஒளி. அந்தப் பாதையில் நடக்கலாம். ஆனால், அந்த ஒளியைப் பற்றுவது இயலாத செயல்” என்றார்கள். இப்போது சோவியத் குடியரசாக இருந்த ருசிய நாட்டில் (பேபிகள்) குழந்தைகள் பூத்துக் குலுங்கும் கொள்ளை (baby boom) என்ற செய்திகள் வருகின்றன. அதாவது சமத்துவ நெறியின் உயிர் நாடி, மகளிர் உரிமைகள் பெறுவதில் இருக்கிறது. அவள் உரிமை பெற்றால், மக்கள் தொகை அதிக மாகும். ஆயின், உழைப்புத் திறனும், உணவுக்கான உற்பத்தியும் அதற்கேற்றாற் போல் பெருக வேண்டுமே? மக்கள் பெருக்கம், பஞ்சத்துக்கும் வறுமைக்கும் எதிரானவை அல்ல. ஆனாலும், வறுமைக்கும் பசிப்பிணிக்கும் அதுவே காரணமாக இருக்கிறது. உலகில் அதிகமான மக்கள் பெருக்கமுள்ள நாடு சீனம். சீன மக்கள் குடியரசில் இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றங்கள் பல. 1949 இல் அது சீன மக்கள் குடியரசாயிற்று. அப்போது அது மக்கள் பெருக்கக் கட்டுப்பாடு பற்றி அவசியம் தெரிவிக்கவில்லை. 53-54 இல் எடுக்கப்பட்ட முதல் மக்கள் பெருக்கக் கணிப்பில் 582 மில்லியன் (58.2 கோடி) இருந்ததாகவும், கட்டுப்பாட்டுக்கான தேவை நெருக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று தெரிய வருகிறது. 54லிலிருந்து 58க்குள் முன்னோக்கிய பாய்ச்சலாகக் கட்டுப்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படலாயிற்று. (மால்தஸ் அறிவுறுத்திய கட்டுப்பாட்டில் செயற்கையான கருக் கொலை யோ, அல்லது செயற்கையான தடையோ இடம் பெறவில்லை. தாமதமான திருமணம், புலனடக்கம் ஆகிய கூறுகளையே அவர் வலியுறுத்தினார்) 2- - 4