பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ அசமுதாயப. .. 50 இந்த இரண்டு நூற்றாண்டுகளில் சமுதாயம், அறிவியல் கண்டுபிடிப்புகளினாலும், மக்களின் வாழ்க்கைமுறைகளினாலும், அடியோடு மாறியிருக்கிறது. எனவே அந்த இரண்டு வழிமுறை களும் செல்லாக்காசுகளே. திருமணம் என்பது பாலியல் உந்துதல் களையோ, மனம்சார்ந்த பலவீனங்களையோ கட்டுப்படுத்தக் கூடிய அறநெறியில்லை, திருமணம் என்பது ஒட்டுநர் உரிமை போன்ற ஒழுங்குக்கான சான்றுதான். இந்தச் சான்றுகள் தெய்வீகம், சமூகம், சட்டம் எல்லா மரபுகளையும் தகர்க்கும் ஒட்டைகளைக் கொண்டவையாக மாறிப் போயிருக்கின்றன. ஆனால், செஞ்சீனத்தில் தனி மனித உரிமை என்பதும், விருப்பு வெறுப்பு ஒழுக்கம் என்பதும் எண்ணிப் பார்க்க முடியாதவை. இருபதாம் நூற்றாண்டின் அரசியல், சமூக பொருளாதார வரலாற்றில் பல முனைகளிலும் சீனம் அதிரடி மாற்றங்களால் முன்னோக்கிப் பாய்ந்து அறைகூவல்களை வெற்றி கொள்ள முடிந்தமைக்கு அதுவே காரணம் எனலாம். 1966-68இல் நிகழ்ந்த கலாசாரப் புரட்சி சற்றே மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நெருக்கடிகளில் குறுக்கிட்டாலும், 1971ல் தாமத மான திருமணம், இடைவெளி அதிகமுள்ள ஒன்றிரண்டு மகப் பேறுகள் என்று திட்டம் செயல்படுத்தப்படத் தீவிரமாயின. 2000த்துக்குள் மக்கள் பெருக்கம் முழுதுமாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்று இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. மக்கள் இருப்பிடங்கள், வாழ்வியல்புகள் சார்ந்து வெவ்வேறு அணுகு முறைகளில் ஒரு குழந்தை"த் திட்டம் செயல்படுத்தப்பட அரசு வசதிகள் செய்தன. 1979லில் இருந்து ஒரு குழந்தை இலக்கைச் செம்மையாக வழிமுறைப்படுத்தியவர்களுக்குப் பரிசுகளும் அல்லாதவர்களுக்கு அபராதம் என்றும் மக்களைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரத் தீவிரம் காட்டப்பட்டது. 80களில் திருமணச் சட்டம், பெண்ணுக்கு 20 வயதாகவும், ஆணுக்கு 22 வயதாகவும் இருந்தன. இதுவும் பெண்ணுக்கு 25 வயதென்றும், ஆணுக்கு 28 வயதென்றும் உயர்த்தப்பட்டது. மக்கள் பெருக்கத்தைக் குறைக்கவேண்டும். பொருளாதாரம் சார்ந்த அதலபாதாளப்பிரிவுகள் அதிகமாகக் கூடாது. இலக்கு என்பது பல முனைகளிலும் மக்களின் உத்தரவாதமான வாழ்வோடு அணுகப்படும் சாத்தியங்களோடு அணுகப்பட