பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 51 வேண்டும். இதற்காகக் கிராமந்தோறும் மருத்துவப் பயிற்சி பெற்ற ஆடம்பரமற்ற மருத்துவர். ( நம்நாட்டில் மருத்துவர் என்றாலே தலையில் ஒளிக்கிரீடம் வந்துவிடும்; ஏழைகளுக்கு அவர் எட்டாக் கொம்பு. இந்நாட்களில் பல லட்சங்கள் கொட்டிக் கொடுத்து இடம்பிடிக்கும் சாதி வாரியான இடங்களில் அமர்ந்தே இந்த சேவைத் தொழிலுக்கான கல்வியைப் பெறுபவர்கள், வாணிபம் செய்வதே நடக்கிறது). சீனத்தில் ஆடம்பரமற்ற என்றால், சேவைக் காகவே நடந்து செல்பவர், (Bare foot doctors) கிராம சுகாதாரம் மட்டுமின்றி, அவரவருக்கு ஏற்ற, மக்கள் கட்டுப்பாட்டு இலக்குக் கான சாதனங்களைத் தேர்வு செய்து செயல்படும் மருத்துவர்களாகப் பரிணமித்தனர். சீனத்தில் குடும்ப மரபு அழுத்தமானது. கிராமங்களில் குடும்ப மரபு பேணப்பட, குழந்தைகள் தேவை என்ற மனப்பங்கு உள்ளவர்கள். இதை நன்குணர்ந்த அரசு சில சந்தர்ப்பங்கள் குடும்பங்களைப் பொறுத்து, இரண்டு குழந்தை களை அனுமதித்திருக்கின்றன. அந்நாள், பெர்ட்ரன்ட் ரஸ்ஸல் என்ற அறிஞர், சீன மக்களின் வாழ்முறையை மக்கள் பின்பற்றினால் உலகு மகிழ்ச்சியாக இருக்கும் என்றார். 1949 இல் அக்டோபர் இரண்டில் (நம் காந்திஜெயந்தி!) மாசேதுங் பொதுவுடமை ஆட்சியைக் கொண்டு வந்தார். நூறு பூக்கள் மலரும் என்ற நம்பிக்கையை உறுதியாக்கிய புரட்சி அது. அப்போது நிலத்தை உழுவதற்குப் போதிய எருதுகள் கூட இல்லை. சீன மக்களேதங்களை எருதுகளாக நினைத்துக் கலப்பை யோடு இணைந்து உழுதார்கள். இந்நாளில் 36 லட்சத்து 91 ஆயிரத்து ஐநூறு சதுரமைல் பரப்பில் 130 கோடி மக்கள் வாழ்கிறார்கள். 5000 கிலோ மீட்டர் நீளமுள்ள மஞ்சள் ஆறு (ஹொயாங் ஹோ) சீனாவின் துயரம் என்று விவரிக்கப்பட்ட ஆறு. 50 ஆண்டுகள் திட்டம் வகுத்து அந்நதியில் நூற்றுக் கணக்கான கால்வாய்களை வெட்டினார்கள். வேளாண்மை வளமும், கூட்டுக் குடும்பமும் சீனப் பண்பாட்டின் அடிநாதம். இந்த அடிநாதத்தில் உழைப்பை ஏற்காமல், உரிமைத் தத்துவம் மட்டும் பேசும் அபசுரங்கள் நீக்கப்பட்டன. பெண்களின் கால் களைக் கட்டிப்போட்ட அநாகரிகமும் விபசாரமும் ஒழிக்கப் ЦILL_GUT. தண்ணிர், எரிவாயு குழாய் மூலம் வருகிறது; மின்னாற்றல்