பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.--/ சமுதாய... 52 தடையில்லை. நடைமுறை வாழ்க்கையில் கார் கலாசாரமும், சாலைப்புழுதி எழுப்பும் நசுங்கும் மனிதமும் இல்லை. கூட்டுக் குடும்பங்களால் எரிசக்தி விரயம் சிக்கனமாகிறது. முதியோர்களைப் பிள்ளைகள் காப்பாற்ற வேண்டும் என்பதே சட்டம். எனவே முதியோர் இல்லங்கள் திறக்கப்பட, வாணிபம் செய்ய வாய்ப்புகள் இல்லை. அரசியல் சட்டங்கள் சீனமொழியில் மட்டுமே இயற்றப் பட்டிருப்பதால் நீதிமன்றங்கள் உள்பட எல்லா அலுவல்களும் சீன மொழியிலேயே நடக்கின்றன. பல்கலைக் கழகங்களும் தாய் மொழியிலே இயங்குகின்றன. ஒன்பதாம் வகுப்புவரை கட்டாயக் கல்வி கொடுக்க வேண்டும். கலாசாரப் புரட்சியில் விபசாரம் ஒழிக்கப்பட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கப்பட்டபின், பத்திரிகைகள், பெண்களை வைத்து வாணிபம் செய்ய முடியாது. (இதெல்லாமும் செய்திகளே!) 2000ம் ஆண்டுகளுக்குப் பிறகு 6 லட்சத்து 90 ஆயிரம் பொருளாதாரக் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் பயனாகச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை நாட்டப்படுகிறது. ஆளுங்கட்சி என்று ஊழல் புரிந்து ஒளிந்து இரட்டை வேடம் போட முடியாது. இந்தப் பின்னணியில் உலகமயமாக்கல் என்ற தவிர்க்க முடியாத தத்துவத்தால் (பல நாடுகள் தங்கள் சுயத்தன்மைகளைக் காத்துக் கொள்ளாமல் தவிக்கும்போது) சீனம் அதே தத்தவத்தைக் கூர்வாளாகத் தீட்டி ஐரோப்பியச் சந்தையை வீழ்த்திக் காட்டி இருக்கிறது. இதேபோல்தான் உறுதியான முழுமையுடன் மக்கள் பெருக்கக் கட்டுப்பாட்டுப் பிரச்சனையையும் அணுகிச் சாதனை செய்கிறது சீனம். உலகிலேயே இதற்கான ஆய்வுத் திட்டத்திற்குக் கருத்தடைச் சாதனங்களின் எளிமை, பயன்படுத்துபவர்களுக்குப் பின்விளைவுகள் இல்லாத பயன்பாடு, அறுவைச் சிகிச்சை முறை களில் பாதிப்பு இல்லாமல் ஏற்போருக்கு உகந்த நவீன அறிவியல் உத்திகள் என்று, வளரும் நாடுகள், வளர்ச்சி பெற்ற நாடுகள் தீவிரம் காட்டாத அளவில் பொருள் ஒதுக்கித் திட்டம் தீட்டியிருக்கிறது சீனம். ஆண்களுக்காக, எளிய முறையில் கண்டுபிடிக்கப்பட்ட அறுவைச் சிகிச்சையின் நவீன உத்தியே, ஐக்கிய அமெரிக்க நாட்டிலும், பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றால், சீனமக்களும்