பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 53 அரசும் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதற்கு மேல் நம் நாட்டின் செயல்பாடு களைப் பற்றியும் அணுகுமுறைகளையும் ஒப்பிடுவதற்கில்லை! சீனத்தில் இருந்து வெளியாகும் செய்திகளுக்கும் நம் நாட்டு நடப்பியலுக்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. ஏனெனில் இந்திய மக்கள் குடியரசின் நடவடிக்கைகள், நிகழ்வுகள் எல்லாமே ஒளிவு மறைவற்றவை. உலக சுகாதார அறிக்கை வெளியிடும் சில அறிக்கைகள் சீன முன்னேற்றத்தை முதன்மையாகக் காட்ட வில்லை என்பது விழுங்குவதற்குக் கடுமையாக இருக்கிறது. அங்கே பெண் குழந்தைகளை வளர, வாழவிடுவதில்லை என்ற அதிர்ச்சித் தகவல்கள் மூடி மறைக்கப்படுகின்றன. 11. அரசியல் நெறிகளும் மக்கள் தொகையும் அரசியல் நெறிகளில் மக்கள் தொகை என்ற கூறு பற்றி அதிகமாகப் புராதன நூல்களில் விவரங்கள் தெரிவிக்கப் பட்டிருக்கவில்லை. இந்தியாவில் அர்த்த சாத்திரத்தை எழுதிய சாணக்கியர் (கெளடில்யா) விரிவாக எதுவும் குறிப்பிட்டிருப் பதாகத் தெரியவில்லை. அரசு, அமைச்சு, படை, கருவூலம், விவசாயம் முதலிய பதினெட்டுதலைப்புகளில் அந்த நூல் காணப் படுகிறது. அவை அனைத்தும் முந்தைய புராண இதிகாச மனுதர்ம நூல்களை ஒட்டியே ஆக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியில்தான் மக்கள் தொகை பற்றிய விவரங்கள் வருகின்றன. 1881 இல் மக்கள் தொகை 253896330 1891 இல் மக்கள் தொகை 287314671 1901 இல் மக்கள் தொகை 29436.1056 1911 இல் மக்கள் தொகை 315156396 1921 இல் மக்கள் தொகை 318942480