பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ அரசியல்... 54 1931 இல் மக்கள் தொகை 35283.7778 1941 இல் மக்கள் தொகை 388997.955 1951 இல் இந்திய யூனியன் மக்கள் தொகை 361820000 பாகிஸ்தான் மக்கள் தொகை 7568.7000 மொத்தம் 43,7507000 1875 ஆம் ஆண்டில் வந்தே மாதரம் கீதத்தை எழுதிய பங்கிம்சந்திரர், அன்றைய வங்க மக்கள் தொகையை ஏழு கோடி என்று கணித்தார். அதையே பின்நாட்களில் 1906 வாக்கில் பாரதி மொழி பெயர்த்தபோது, அன்றைய இந்திய மக்கள் தொகையை முப்பது கோடி என்று கணித்தார். 1947 இல் நாடு சுதந்திரம் பெற்றதும் கணிக்கப்பட்ட தொகை முப்பத்தாறு கோடியே பதினெட்டு லட்சத்து 20 ஆயிரம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. பிரிவினைச் சேதங்களும், சமயக்கலவரங்களும், இடம் பெயர் தலிலும் கணிப்பு அவ்வளவு சரியாக இருக்க வாய்ப்பில்லை. மேலும் அந்நாள்.அசுவமேதக் குதிரையை அனுப்பி, 'சாம்ராஜ்யம்' விரிவாக்கப்பட்டதென்றால், இன்றும் வெவ்வேறு வடிவங்களில் உழைப்புரிமைகளைப் பெற ஆதிக்கங்கள் வலிமை பெற்று வருகின்றன. தீக்கங்கில் தொடங்கி, இந்நாள் முழு நாசம் விளைவிக்கக்கூடிய ஏவுகணைகள், அணு ஆற்றலைக் கொண்டு அமைதிக்கான் வளமை பெறுவதாகக் கூறி ஆங்காங்கு நிறுவப் படும் அணு உலைகள் எல்லாமே மக்களை, குறிப்பாகப் பெண் களை வலிமையற்றவர்களாகச் சிதைத்துக் கொண்டு வருகின்றன. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படை யில் வளமைக்கான திட்டங்கள் போடப்படுவது நல்ல முயற்சி தான். ஆனால், இந்திய மக்கள் காலனி ஆதிக்கத்தின் கீழ் வந்த பிறகு சொந்த மண்ணில் தங்கள் மரபுகள் தொழிலில் ஈடுபட்டுப் பிழைக்க வழியின்றி அதே ஆதிக்கக்காரர் எங்கெங்கும் அடிமை கொண்ட மண்ணில் காடு திருத்தி, தேயிலை பயிரிடவும் கரும்பு பயிரிடவும் அடிமைகளாக்கி அழைத்துச் சென்றபோது, எத்தனை மக்கள் ஆணும் பெண்ணும் கொள்ளை நோய்களாலும் பயணக் கொடுமை யாலும் இறந்தார்கள் என்பதற்குக் கணக்கு இல்லை. அந்நிய