பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 55 மண்ணில் அவர்கள் தங்கள் உழைப்பை மட்டும் கொடுக்க வில்லை. தங்கள் பாரம்பரிய உணர்வுகளையும், பெண்கள் நலன் களையும் பறி கொடுத்தார்கள். ஒரு காந்தியடிகள் தோன்றி, அறப் போராட்டம் துவக்கவும், நாடு விடுதலை பெறவும் அந்த இடம் பெயர்ந்த உழைப்புக் கொள்ளையே அடித்தளம் அமைத்தது. அண்மைக் காலங்களில் நாம் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் உழைப்பைக் கொடுக்கப் பெயர்ந்து சென்ற இந்திய உழைப்பாளரின் நிலை பார்த்தோம். அவர்கள் இரண்டு மூன்று தலைமுறைகள் வெள்ளைக்கார மேலாண்மையின் கீழ் உழைத்தபோது, உரிமைகள் என்ற உணர்வே இல்லாதவர்களாக நிறைய நிறைய மக்களை உழைப் படிமைத் தொகையை அதிகமாக்கும் வகையில் பெருக்கினார்கள். இந்தப் பிள்ளை பெண்கள் விவரம் தெரிந்ததும் புல்லறுக்கவும், தேயிலை கிள்ளவும் உழைப்பைக் கொடுத்து அரைக்கூலி பெறும் பையன் பெரியவனானால் குடிக்கக் கற்றுக் கொள்வான். பெண் அடி பொறுப்பாள்; பிள்ளை சுமப்பாள். உள்நாட்டுக் கலவரங்கள் இனப்போர் வந்தபோது இவர்கள் தொடர்பில்லாமலே ஒப்பந்தங்கள் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே போடப்பட்டன. கொத்தலா வலை ஒப்பந்தம், சிரிமாவோ சாஸ்திரி ஒப்பந்தம், ராஜிவ் காந்தி காலத்து ஒப்பந்தம் என்று போடப்பட்டு உழைத்த நாட்டிலும் உரிமையற்று, சொந்த நாட்டிலும் உரிமையற்று அகதிகளாகத் திரும்பி வரும் அவலம் நிகழ்ந்தது. மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கும், வளமைக்கான பொருளாதாரத் திட்டங்களுக்கும் தொடர்பே இல்லை என்று சொல்லத் தோன்றுகிறது. இந்தியா ஒரு விவசாய நாடு. இன்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வானொலி நிகழ்ச்சிகளிலும் 'காந்தியடிகள் கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது எனச் சொல்லியிருக்கிறார்' என்று நினைவுபடுத்தப்படுகிறது. ஆனால், உண்மையாக இன்று இந்தியா கிராமங்களில் வாழ்கிறதா? 1951 இல் மக்கள் தொகை ஏறக்குறைய 43-44 கோடிகளாக இருந்த காலத்தில் உழவுத் தொழில் செய்வோர் பெரும்பான்மையினரும் கிராமங்களில் வாழ்ந்தனர். உழவுத் தொழில் செய்வோரைப் பொதுவாக நான்கு பிரிவுகளுக்குள் வகைப்படுத்தலாம்.