பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ அரசியல்... 56 சொந்தத்தில் பயிரிடுவோரும் அவரைச் சார்ந்தவர்களும் - 16,73,465.01 சொந்தமல்லாத நிலங்களை வைத்துப் பயிரிடுவோரும், அவரைச் சார்ந்தோரும் - 3,16,39719 பயிரிடும் உழைப்பாளிகளும் அவரைச் சார்ந்தோரும் - 4,48, 11928 நிலம் பயிரிடாமல் நிலவருமானம் வாங்குவோரும் அவரைச் சார்ந்தோரும் - 5,35,24301 மொத்தம் 24, 91,22449 பிற உற்பத்தித் தொழில்கள், வாணிபம், போக்குவரத்து, சேவைத் தொழில் என்று ஈடுபட்டவர் மொத்தம் 10,75,71,940. இந்திய மக்களில் 69.8% உழவுத் தொழிலில் ஈடுபட்டவர். மற்றவர்கள் 30 சதவீதம் மட்டுமே வேறு வகைகளில் வருமானம் ஈட்டி வாழ்ந்தனர். 1951 இல் ஆயிரம் ஆண்களுக்கு 947 பெண்களே வாழ்ந்ததாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இயல்பில் பெண்ணே அதிகம் வலிமை உள்ளவள். பூச்சி இனங்களில் இருந்து உயர் மனிதன் வரை சமுதாய உற்பத்தி, மீட்டுருவாக்கம் ஆகிய இன்றியமையாத் தன்மைகள் பெண்களைச் சார்ந்தே இருக்கின்றன. பூச்சி இனங் களில் கூடல் நிகழ்ந்ததும், ஆண் அழியும். தேள் போன்ற இனங் களில் பெண் தின்றுவிடும். பெண் முட்டையிட்டு மறு உற்பத்தி விளைவுக்கு அதிக நாட்கள் வாழும் இயல்புடையது. பெண்ணுக்குப் பூப்படைதலுக்குப் பிறகு எத்துணை குருதிப் பெருக்கு ஏற்படுகிறது? அவள்தாங்கி உயிர்வாழும் இயல்புடைய வலிமை பெற்றிருக்கிறாள். இருந்தும், ஆயிரத்துக்கு 947 பெண்களே வாழ்ந்ததாகக் கணிக்கப்பெற்றிருக்கிறது. ஏனெனில், பெண் சிசுக்கள் அழிக்கப்படும் வழக்கம் இருந்ததென்பதை ஆங்கிலேய அரசே 1805-ம் ஆண்டிலேயே ஆவணப் படுத்தியுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஆணே சந்ததி வாரிசு என்று காலம் காலமாக முதன்மைப்படுத்தப்பட்டு வந்திருக்கிறான். தென்