பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 57 தமிழ்நாடு, தாயாண் சமுதாய மரபினரின் மிச்ச சொச்ச வழக்கங்கள் பின்பற்றப்பட்ட பகுதியாகும். பெண் குழந்தைகள் பிறந்த இடத்துக்குச் சொந்தமில்லை என்ற உயர் சாதியினர் உழைப்புச் சமூகத்தினர் அல்ல. பெரும்பாலும் அந்நாள் நில உரிமையாளர் என்ற பெயரில் மேலாண்மை செலுத்தியவர். ஆனால், இந்த ஐம்பது ஆண்டுகளில் அந்தக் கட்டமைப்புகள் புதிய ஜனநாயக அரசியலின் விளைவாகவும், பெரியார் போன்றோரின் சுயமரியாதை, சமூக சீர்திருத்தப் பிரசாரங்களின் விளைவாகவும் சமூக பொருளாதார வளர்ச்சிக்காகப் போடப்பட்ட ஒன்பது ஐந்தாண்டுத்திட்டங்களின் பயனாகவும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித உழைப்பின் நாணயங்களையே புதிய இலக்குகளில் திருப்பியதன் காரணமாகவும் முற்றிலும் தகர்ந்து, அந்தச் சிதிலங்களின் மேல் உருப்புரியாத சமூகப் பயன்களையும், அவலங்களையும் அமைத்திருக்கின்றன. அந்நாள் 51ம் ஆண்டு அறிக்கையின்படி இந்தியா முழுவதும் கல்விக்கு 47கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படித்த மாணவர் 1,29,60532 பேர் என்றும் மாணவியர் 41,32,100 பேர் என்றும் தெரியவருகிறது. 43 சொச்சம் கோடிகளில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து 1.5 கோடிப் பேர்கள் மட்டுமே படித்தனர் என்றும், பெண்கள் ஐம்பது லட்சம் பேர் கூடப் பள்ளிகளில் பயிலவில்லை என்றும் தெரியவருகிறது. படிப்பறிவே 18.3 சதவிகிதம்தான். ஆனால், இந்நாட்களில் 2001 கணக்கெடுப்பின்படி 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையில் 65.38 சதவிகிதமாக இது உயர்ந்து வருகிறது. பெண் கல்வி மிக ஊக்கமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. அதிக எண்ணிக் கையில் பள்ளிகளில் பெண்களைச் சேர்க்கவும் அவர்கள் இடை யில் நின்று விடாது தொடர்ந்து பள்ளிப்படிப்பை முடிக்கவும், தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கிராமப் பள்ளிகளில், பெண் ஆசிரியர்களே நியமனம் செய்யப் பட்டுள்ளனர். கிராமங்களில் பள்ளிக்குப் பெண்கள் அறவே செல்லாமல் இருந்த நிலை இன்று இல்லை. முதியோர், முறைசாராக் கல்வி முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 1991 - 2001 காலகட்டத்தில் உயர்கல்வி கற்கும் பெண்கள் மிகவும் அதிகரித்து 14.87 சதவிகித வளர்ச்சியை எட்டி இருக்கின்றன. முன்பெல்லாம் பெண்கள் என்றால் ஆசிரியர், செவிலியர், மருத்துவர் என்ற