பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ அரசியல்... = 58 தொழில்களுக்கு மட்டுமே படித்த பெண்கள் இந்நாட்களில் ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று, அதிநவீன தொழில் நுட்பக்கல்வியிலும் பொறியியல் சார்ந்த அனைத்துப் பிரிவு களிலும் சாதனைகளே புரியுமளவிற்குச் சிறந்திருக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டிலும் பள்ளி இறுதித் தேர்வுகளில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் சிறந்த முறையில் வெற்றி பெறுகிறார்கள். ஆண் ஆதிக்க மனப்பான்மையினால் அழுத்தப் பெற்றாலும் பத்து மடங்கு உழைத்துத் தம் தகுதிகளை மெய்ப்பித்திருக்கிறார்கள். ஒரு கிரண்பேடி போல், பலரும் ஆட்சிப் பொறுப்பில் கிராமங்களில் இருந்து வந்து சிறப்பாகப் பணிபுரியும் மகளிர் பலரும் சாதனைப் பெண்மணிகளாக விளங்குகிறார்கள். கல்பனா சாவ்லா, இந்தியப் பெண்களின் சாதனைக்கு எடுத்துக்காட்டு. பெண் குழந்தைகளைக் கொல்லும் வழக்கம் இன்னமும் பல்வேறு வடமாநிலங்களிலும் தென் மாநிலத்தின் சில பகுதிகளிலும் ஒழியவில்லை. ஏன் என்று பெரியதொரு அழுத்தமான வினாவைக் கேட்கவேண்டியவர்களாக இருக்கிறோம். உலகுக்கு ஒரு கல்பனா சாவ்லாவைத் தந்த ஹரியானா பஞ்சாபில் இந்நாள் 1000 ஆண்களுக்கு எண்ணுாறு பெண்கள் என இறங்கி வந்ததேன்? கேரளத்தில் மட்டுமே 1036க்கு 1058 என்று மேனிலை எய்தியிருக்கிறது. கல்வியிலும், முன்னேற்றத்திலும் கேரளத்துக்கு அடுத்த இடத்தை வகிக்கும் தமிழ்நாட்டில் 1000க்கு 98.6 என்று காணப்படுகிறது. பாண்டிச்சேரி தமிழ்நாட்டை ஒட்டியதுதான். 1000க்கு 1001 என்று முன்னேற்றத்தில் இருக்கிறது. தலைநகரில் தேசியத் தலைநகரில் 1000க்கு 821 என்ற இறங்கு முகம். நம் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் ஆணாதிக்கக் கோட்டையில் பறக்கும் கொடியாக அறிவிக்கிறது ஏன்? ஏன்? ஏன்? மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதென்றால் பெண் களைப் பல வகைகளிலும் ஒடுக்கி அழிப்பதுதானா? ஆட்சி உரிமை பெற்று அரசின் செயல்பாடுகளிலும் திட்டங்களிலும் சரி பாதியாகப் பங்கேற்கும் தகுதி பெண்களுக்கு உண்டு. நாட்டின் வளர்ச்சித் திட்டங்களிலும், பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்களை வகுப்பதிலும் பெண்ணின் பங்கேற்பு இருக்கிறதா? இல்லை. முப்பத்து மூன்று சதவிகித ஒதுக்கீடு கோரி இரு தலைமுறைக் காலங்களாகக் கேட்டு, போராடும் பெண்களை, சாதி,