பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 59 மதம், மேல் கீழ் என்ற தந்திரங்களில் நுழைந்து, ஆணாதிக்க அரசியல் கட்சிகள் பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்ற கோட்பாட்டில் சுகமாகக் குளிர் காய்கின்றன. பெண் கருக்களை அழித்தும், குழந்தைகளைக் கண் விழிக்கும் முன் கொன்றும் சதிக் கொடுமையில் எரித்தும், கைம்மைக் கொடுமையில் பட்டினி போட்டுக் கொலை செய்தும், பாலியல் வன்முறைகளில் அவள் உயிராற்றலைப் பறித்தும், உழைப்பாற்றலைச் சுரண்டியும் காலந் தோறும் அவள் ஒடுக்கப்பட்டு வந்திருக்கிறாள். மக்கள் தொகையில் சரிபாதியோ மேலாகவோ பெண்கள் இருக்க வேண்டும். இன்றும் 102 கோடியைத் தாண்டியுள்ள மக்கள் தொகையில் பெண்கள் 49.6 கோடியும் ஆண்கள் 53.2கோடியும் என்று கணக்கு அறிவிக்கிறது. அரசியல் கட்சிகள் அதுவும் சமத்துவக் கொள்கையின் அடிப்படையில் இயங்கும் கட்சிகளே, பெண்களுக்குத் தங்கள் கட்சியில் பத்து சதவிகிதத்தினருக்குக்கூட பிரதிநிதித்துவ உரிமை கொடுப்பதில்லை என்பது வெட்கக்கேடான உண்மை. கட்சித் தலைமை என்பது பெரும்பாலும் தனி ஆணின் அதிகாரத்தை மையப்படுத்தியே அமைகிறது. கட்சிகள் உடையும் போது தனிமனிதச்செல்வாக்கைப் பொறுத்தே உறுப்பினர்களும், 'மந்தை சேருகிறார்கள். பெண்களைச் சமமாகப் பாவிக்கிறோம். பெண்ணுரிமை எழுச்சி என்றெல்லாம் பாரதி பாடல்களைச் சொல்லிக்கொண்டு பெண்களைத் தங்களுக்கு வாக்குரிமை சேர்க்கும் படையாகப் பயன்படுத்தி வருகிறார்கள். தப்பித் தவறி ஒரு பெண் அரசியல் தலைமையைப் பற்றிக் கொண்டால், அறம் தவிர்த்த வியூகங்களை வளைத்து, அவளைப் பதவி இறக்கவே ஆண் ஆதிக்க அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. இந்தக் குடியரசு நாட்டில் பெண் எத்தனையோ வகைகளில் அறிவார்ந்த துறைகளில் சாதனைகள் செய்திருக்கிறாள். ஆனால், அரசியல் என்று வரும்போது, அவள் தன்னுரிமையை இழந்துவிடுகிறாள். எனவே இந்த அரசியல் பெண்களை ஒடுக்கும் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் குறித்து ஏனென்று ஒரு பெண் மருத்துவர் கூடக் கேட்கவில்லை. அதுவும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வாதாரங்கள் இல்லாமல் குடிகாரப்புருடனின் ஆளுகை யில் அவனைவிடக் கொடுமையான அரசின் கட்டாயங்களுக்கு அவள் உடல் உட்பட வேண்டிய நிலையில் வாழும் உரிமைதான் குடியாட்சி உரிமையா?