பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. சமுதாய வளர்ச்சியில் அந்நியமாகும் பெண் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பரம்பரையாக உழவு - பயிர்த் தொழிலில் ஈடுபட்டிருந்த மக்கள் பெருவாரியாக அதை விட்டு நகரங்களுக்கு இடம் பெயர்ந்திருக்கின்றனர். கிராமப் பொருளாதாரம் மேம்படும் வகையில் ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டங்கள் அமையவில்லை என்பதை முன்பே கண்டோம். அன்றைய முதல் பாரதப் பிரதமர் அனைத்திட்டத்தைத் திறப்பு விழாச் செய்கையில் முதலில் மண்ணை வெட்டிப்போட்ட கூலிப் பெண்மணியைக் கவுரவிக்கும் வகையில், அவளுக்கு மாலை அணிவித்து அவளையே நீர் மின் திட்டத்துக்கான பித்தானை அமுக்கச் செய்தார். “இந்த மகத்தான வளர்ச்சித் திட்டத்தால் பயனடையப் போகிறீர்கள்; நானும் நீயும் சமமாகப் போகிறோம்' என்ற கனவைச் சூக்குமமாக அறிவித்த செயல் அது. ஆனால், இத்தனை ஆண்டு களில் ஒவ்வொரு வளர்ச்சித்திட்டமும் குடிசை களில் வாழ்வோரை நகர நெரிசல்களில் நிற்க நிழலும் சாயச்சுவரு மில்லாமல் வேலை தேடி வருவதையே வளர்த்துக்கொண்டிருக் கிறது. அன்று கோமான்களாக இருந்தவர்கள் குடியரசாட்சி’ முறையிலும் பரம்பரை மாறாமல் கோமான்கள், பெருங் கோமான்கள் என்று கோடிகளில் புரள்பவராக உயர்ந்திருக் கின்றனர். அறுபதுகளின் பிற்பகுதியில் மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும் என்ற முடிவுடன் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை அரசு கைக்கெண்டு அரசு மருத்துவ மனைகளில் விவரம் அறிவிக்காமலேயே அறியாமை நிறைந்த கிராமப் பெண்களை லூப் சாதனம் புகுத்த சோதனை உயிர் களாக்கின. துவக்கப்பட்டதுமே, முயற்சி கைவிடப்பட வேண்டி வந்தது. ஆனால் பிரசாரங்களில் பின்னடைவு ஏற்படவில்லை. நாட்டில் எந்த மாநிலத்துக்குப் போனாலும், ஆசைக்கு ஒன்று; ஆஸ்திக்கு ஒன்று; நாம் இருவர்; நமக்கு இருவர். தாமதத்