பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ சமுதாய... 64 ஒரு வகையில் குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரசாரத்துக்கு எதிரான வீம்புகளாக இந்தச் சிசுக் கொலை, கருக்கொலை நிகழ்வன போல் கருதத் தோன்றுகிறது. இன்னொரு முக்கியக் காரணம், பெண்களை விவசாயத்தில் இருந்து ஒதுக்கிய கூறுகள். முன்பு குறிப்பிட்டபடி, பசுமைப்புரட்சி என்ற பெயரில் புதிய விவசாய உத்திகள், செயற்கை உரங்கள், இயந்திரமயமாக்கல் எல்லாம் உணவு உற்பத்தி முறையை மாற்றி, பணப் பயிருக்கே உற்பத்தி முதன்மை வந்தது. பெண்களின் உற்பத்திப் பங்கு பாதிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த குடும்பமாக உழைத்து, விளைவைச் சமமாகப் பங்கிட்டு வாழ்ந்த இயற்கை வாழ்முறை அடியோடு தகர்ந்தது. ஆண்கள் அதிகாரம் ஓங்கும் நிலை உருவாயிற்று. இயற்கை வாழ்வுக்கு அவசியமில்லாத கவர்ச்சிப் பொருட்களை உற்பத்தி செய்து, கிராமங்களில் சந்தைப்படுத்தி தேவைகளால் அந்த மக்களின் கழுத்தை நெறித்த பணத்தேவை பெண் சிசுக் கொலை என்று சமுதாயத்தின் அழுகல் முகத்தைக் காட்டியது. சமத்துவம் பேசும் கொள்கை கொண்ட அரசியல் கட்சியைச் சார்ந்த இளைஞர்கள், பெண்கள் கூட இந்த இயலாமை கண்டு கொதித்தெழவில்லை. தமிழக அரசின் பெண் முதல்வர் தொட்டில் குழந்தைத் திட்டம் கொண்டு வந்தார். பெண் குழந்தைகள் கருணை இல்லங்களில் விடப்பட்டன. ஆனாலும் பெண் குழந்தைகள் கொல்லப்படுவது அறவே தடுக்க இயலாததாகப் பல்வேறு அழிப்பு முறைகளை அறிவியல் முன்னேற்றங்கள் நடைமுறைப்படுத்தியிருக்கின்றன. முறையற்ற கருக்களை அழித்து, ரகசியமாகப் 'பாவ'த் தொழில்கள் செய்து பொருள் ஈட்டிய மருத்துவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கருக்கலைப்பு நிலையம் என்று பலகை மாட்டிக் கொண்டே கருவில் உள்ளது பெண் குழந்தை என்றால் அழிக்கிறார்கள். இந்த வசதிக்கும், பொருள் இல்லாத பெண்கள் பெண் குழந்தைகள் பிறந்த உடன் அழிக்கிறார்கள். இப்போது அரசு இதற்குத் தண்டனை என்று சட்டத்தைக் கடுமையாக்கி இருப்பது, எரிகிற கொள்ளியில் இருந்து காயும் எண்ணெயில் விழுந்துவிட்ட வரலாறாக, கொலை, தற்கொலை, கடன், வாழ முடியாமல் ஊர், உறவு அந்நியப்படுத்தும் கொடுமை என்று வரலாறு தொடர்கிறது.