பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 65 இத்துணை துன்பங்களிலும் கருத்தடை முறைகள் எதுவும் தலைகாட்டவில்லை. -- ஏன்? இங்கு அரசு மக்கள் பெருக்கத்தைக் குறைக்க வேண்டும் என்று திட்டத்துக்கான நிதி ஒதுக்கி, விளம்பர வாசகங்கள் தரகர்கள், ஆள்பிடித்து வரும் அவலங்கள் எல்லாவற்றையும் அரங்கேற்றி னாலும் அடிப்படைக் காரணங்கள் நியாய அநியாயங்கள் எவற்றையும் கண்டுகொள்ளவில்லை. உண்மையில் பாதுகாப்பான உடலுறவு என்ற குறிக்கோளில் கருத்தடை சாதனங்களைச் சாதி, சமய வித்தியாசமின்றி அறிவார்ந்த மிகச் சிறிய சதவிகிதத்தினரே பயன்படுத்துகின்றனர். தொடக்கக் காலத்தில், முன்பே குறிப்பிட்டபடி, பாவம் என்று கருதப்படாத கருத்தடை முறைகளை இஸ்லாமிய ஹதீஸ் நீதி நூலிலும், கதோலிக்கர்களிடமும் புராதன சமயங்களிலும் கூட நடைமுறைப் படுத்தலாம் என்று கண்டிருக்கின்றனர். அவற்றைப் பார்க்கலாம். எல்லா நெறியாளர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆணின் புலனடக்கம். இதற்கும் ஒன்றிரண்டு மக்களைப் பெறுவது தடையில்லை. ஆனால் சாதாரண மனிதர்களும் இராமகிருஷ்ணர் சாரதாமணிதேவியார் போல் இருக்க முடியாது. இரண்டே இரண்டு குழந்தைகளைப் பெற்றபின் காந்தியடிகளைப் போல் பிரும்ம சரியம் கடைப்பிடிப்பதும் இயலாததாகும். ஏனெனில் அதற்கேற்ற ஒழுங்குமுறைகள் கூடிய இயற்கை வாழ்வு, சூழல் ஆகியவை இன்றியமையாதவை. இராமகிருஷ்ணர் பக்தி நெறியில் காளியை அன்னையாகக் கருதினார். எல்லாப் பெண்களுமே காளியின் வடிவங்களாகவே அவருக்கு வழிபடுபவர்களாகவே இருந்தார்கள். பிரும்மசரியம் என்ற ஒழுக்கம் மனமுதிர்ச்சியின் விளைவாக, புலன்களை ஒடுக்கும் பயிற்சியில் கூடுவதாகும். அதற்கு மறுபக்கம், அன்பு, கருணை, உடலுழைப்பு, ஆசாபாசங்கள் அறுத்தல் ஆகிய பண்புகள் எனலாம். ஒர் உயிரைத் தோற்று விக்கும் விந்தணுக்கள் உரிய பருவத்தில் கரைபுரண்டுவரும் காட்டாறு போல் பெருகக்கூடும். இந்தப் பருவ ஒழுக்கம் கல்வி கற்றலாகும். ஆனால், இந்நாட்களில் அத்தகைய குரு-சீட கல்விமுறை என்பது அறவே இல்லை. ஒழுக்கப் பயிற்சிகளுக்கான சூழலும் இல்லை. * பழைய நாட்களில் பெண்களைக் கல்வி பயில அனுப்பாததன் ЭР- - 5