பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ சமுதாய... 56 காரணமே ஒழுக்கக் குறைவு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம்தான். வீட்டுவேலை செய்தல், கோலம் போடுதல், சித்திரப் பூ வேலை செய்தல் என்று நான்கு சுவர்களுக்குள் மட்டுமே அவள் சுதந்திரம் இருந்தது. பூப்பெய்திய பின்னரே திருமணம் செய்து கொடுக்கும் மரபுச்சாதியில் அந்நாட்களில் அத்தகைய பெண் ஒரு வீட்டில் இருந்தால் ஒரு திரை தொங்கும். திருமணத்துக்குப் பெண் கேட்டு வருபவர்களில் பெண்களே பெண்ணை வந்து பார்ப்பார்கள். திருமணம் கூடும் என்ற அளவில் இரு தரப்பாரும் ஒத்துக் கொண்டாலும் மணமகன் பெண்ணை மணமேடையில்தான் பார்க்க முடியும். "பர்தா' முறையும் ஆணின் கட்டவிழ்தலில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் அடிப்படையில் அமைந்ததுதான். எனவே திருமணமான பின் ஒழுக்கம் என்பது ஆண் தான் ஒத்துழைக்க முன்மொழிபவனாக இருக்கவேண்டும். மனைவியும் இசைந்து, கலவியின் உச்சகட்டப் பின்வாங்குதலைச் செயல் படுத்துவது பற்றி முன்பே குறிப்பிடப்பட்டது. இயற்கைக்கு முரணாக இல்லாத குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள், ஐம்பது களின் பிற்பகுதிகளில் வானொலியின் வாயிலாகவே பரிந்து ரைக்கப்பட்டன. வானொலி எல்லா மக்களையும் சென்று எட்டும் சாதனம். மகளிருக்கான நிகழ்ச்சிகளில் இதுபற்றி விவரிக்கப் பட்டது. மாதவிலக்கு ஏற்பட்டதன் பின்னும் சினைமுட்டை முதிர்ந்து வரும் நாட்களைக் கண்டறிந்து அந்த நாட்களில் உறவு கொள்ளாமல் தவிர்ப்பது, பாதுகாப்பான உடலுறவாகும். ஒரு பெண் பூப்படைந்து கருவுறக்கூடிய இருபது, இருபத்தைந்து ஆண்டு காலத்தில் முந்நூறிலிருந்து நானுறு சினைமுட்டைகள் வெளியாகக் கூடும். முட்டைகள் முதிர்ந்து வெளியானபின் கருவுறும் காலம் ஒருநாள் - 24 மணி நேரம் மட்டுமே என்றாலும், விந்தனுக்கள் கூடலுக்குப்பின் ஒன்றரை இரண்டு மணி நேரத்தில் கருக்குழாயில் வந்து சேரும். இவை ஐந்து நாட்கள் உயிர்ப்புடன் இருக்கலாம். (இருந்தாலும், கருவுறும் சாத்தியம், செயற்கை முறைக் கருத்தரிப்பில் நான்கு நாட்களுக்குப் பின் உயிர்த்திருப்பதில்லை என்று கண்டிருக்கின்றனர்) அதாவது, மாதவிலக்குகளுக்கு இடைப்பட்ட 25-28 நாட்களுக்குள் கருத்தரிக்கக்கூடிய காலம், விலக்கு முடிந்து பத்தாம் நாளில் இருந்து பதினெட்டாம் நாள் வரை என்று ஆய்வாளர்