பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 67 கூறுகின்றனர். இதுதான் ‘ரிதம்' முறை என்று கணக்கிடப் பட்டிருக்கிறது. இந்த நாட்களைத் தவிர்க்க வேண்டும். ஆனால் இயல்பாகவே ஒழுங்கில்லாத மாதவிலக்குடையவர், பயணம், மன அழுத்தம் போன்ற நிலைகளிலும் மாதவிலக்கு நிற்கக்கூடிய காலங்களிலும் வளர் இளம் பருவத்திலும் கடைப்பிடிக்க இயலாத முறை இது. இந்த முறையில் ஒரு சிறு கண்காணிப்பில் கவனம் சிதைந்தாலும் கருவுறுவது சாத்தியமே. உடல் வெம்மையுறுவதை வைத்து அறியும் முறையில், சினைமுட்டைகளின் முதிர்வையும் கருவுறும் வாய்ப்பையும் அறியலாம். "புரொஜஸ்ட்ரான்’ என்ற நிணநீர் சுரக்கும்போது சிறிதளவு உடல் வெப்பமடைகிறது. இந்தச் சுரப்புநீர் உச்சநிலை அடை வதை உடல் வெப்பம், அன்றாடம் பதிவு செய்யும்போது தெரியவரும். அன்றாடம் படுக்கையிலிருந்து எழுந்திருக்குமுன், முகம் கழுவி எதுவும் உட்கொள்ளுமுன் சாதாரணமான வெப்ப மானியையோ அல்லது இதற்கென்றே அமைந்த சிறப்பு வெப்ப மானியையோ நாவுக்கடியில் மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் வைத்துக் கண்டறியலாம். யோனி வாயிலிலோ, குதவாயிலிலோ வைத்தறிவது சிறந்ததென்றாலும், பெண்கள் பெரும்பாலும் அதை விரும்புவதில்லை. சினைமுட்டை முதிர்ந்து வருமுன் பாதுகாப்பான உடலுறவு நிச்சயமானதல்ல. முதிர்ந்த உடல் சூடு இறங்கி மூன்று நாட்களுக்குப் பிறகே பாதுகாப்பான உடலுறவு சாத்தியம். நம் இந்திய மரபில் சில நாட்களில் தவிர்க்க வேண்டும் என்ற ஒழுக்கப் பண்பாடு இருந்தது. கருத்தரிக்கும் நேரம், குறிப்பிட்ட திதிகளில் குறிப்பிட்ட நேரங்கள் என்றெல்லாம் ஆன்றோர் விதித்திருந்தனர். மேலும் கூட்டுக் குடும்பங்களில் மூன்று தலை முறையினர் விதவைகள், முதியோர், இளம்பிள்ளைகள் கூடி வசித்தனர். உழைப்பு, உடல் போகங்களை நாடும் விருவிருப்புக்கு இடம்கொடாது. தனிமையில்லாத கடமைக்குக் குடும்ப உணர்வுகள் குறுக்கிடும். கணவன் மனைவி தனிமையில் சந்தித்துக் கொள்வதே பெரும்பாடாக இருக்கும். நீலகிரி வாழ் பழங்குடியினர் வீடுகள் ஒரே அமைப்புடை