பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ சமுதாய... 58 யனவாக இருக்கும். பழங்காலத்தில் பொன்னைக் கொடுத்துப் பெண்ணைக் கூட்டிவரும் திருமணம் பெயருக்குத்தான் நடக்கும். வீட்டில் திருமணமாகாத மூன்று பிள்ளைகள் இருக்கலாம். அவள் கருவுற்ற பின்னரே அசல் திருமணம் நிகழும். 'இவள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்குத் தந்தை யார் என்பதைப் பெண் முன்பே தெரிவித்திருந்தாலும் பெரியோர் கூடிய அவையில் அவளிடம் அந்த வினா எழுப்பப்படும். அவள் உண்மையான தந்தையை அவையில் தெரிவிப்பாள். பின்னரே அவள் அவனுக்கு உரிமை யாகும் திருமணம் நடக்கும். தனிமையில் உடலுறவு கொள்ளும் சூழல் வீட்டில் இருக்காது. என்றாலும், பாதுகாப்பான கானகச் சூழல், அருவிக் கரைகள் தனிமையும் சந்ததிக்கான போக இன்ப மும் நல்கும். இந்தப் பெண் குறிப்பிட்ட காலத்துக்குள் கருவுற வில்லை என்றால், அவள் தாய் வீட்டுக்கு அழைத்துச் செல்லப் படுவாள். கொடுக்கப்பட்ட பொன் திரும்பப் பெறப்படும். இதே பெண்ணை வேறு குடும்பத்திலிருந்து விழைந்து வருபவர் உண்டு. கருவுறலாம்; தடையில்லை. அப்படி இரண்டு மூன்று திருமணங் களிலும் கருவுறவில்லை என்றாலும் அவள் இகழப்பட்டதில்லை. உழைத்தும் குடும்ப மக்களைப் பேணியும் கிராமத்தில் கவுரவமாக வாழ முடியும். அந்நாட்களில் விதவை, விலக்கப்பட்டவள் என்ற இழிவுகள் அச்சமூகங்களில் இருந்திருக்கவில்லை. ஆனால், வாழ்க்கைமுறை இந்நாள் அடியோடு மாறி பெண்களை உரிமை அற்றவர்களாக வரதட்சணை என்ற பண, பொருள் மதிப்பு இருந்தாலே திருமணம் கூடும் என்ற கீழ்நிலைக்குத் தள்ளி இருக்கிறது. மூன்றாவது பாதுகாப்பான உடலுறவுக்காலத்தைக் கருப் பாதையில் வழவழப்பான சளி போன்ற திரவம் தோன்றுவதி லிருந்து தெரிந்து கொள்ளலாம். ஈஸ்ட்ரோஜென் - புரொஜஸ்ட்ரான் காரணமாக, சினைமுட்டைகள் முதிர்ந்து உயிர்த்திருப்பதை அறிவிக்கும் அறிகுறி அந்தச் சளி போன்ற வெளிப்பாடு. இந்த நாட்களைத் தவிர்த்து, உலர் நாட்களில் உடலுறவு கொள்ளலாம். இந்த முறைகளில் இருபாலாரும் ஒத்துழைக்க வேண்டும். மேலும் ஆணாதிக்க மரபும், அறியாமையும் வறுமையின் கூர்