பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 59 முனைகளும் கூடிய வாழ்க்கையில், ஆண் பெண்ணைக் கூடுவ தென்பதே அவன் இல்லாமைகளின் இறுக்கங்களை, கோபங் களை அவளிடம் இறக்கிக் கொள்வதே கூடல்' என்ற திணிப்பு. விளைவு கருவுறல். எனவே பாவமற்ற, இயற்கை அனுமதியுடன் கூடிய இத்தகைய கருத்தடை என்பது இந்திய சமுதாயத்தில் சிறிதும் பயன்படக்கூடியதல்ல. என்றாலும் கதோலிக்க, இஸ்லாமிய சமயங்களில் ஒத்துக்கொள்ளப்பட்ட ஆணோ, பெண்ணோ, விந்தணுவை உரிய நேரத்தில் செலுத்தாமல் பின்வாங்கும் கருத்தடை முறை ஐரோப்பாவிலும் இங்கிலாந்திலும் பதினெட் டாம் நூற்றாண்டிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு மக்கள்தொகைக் குறைப்புக்கு ஆதாரமாக இருந்திருக்கிறது. கருத்தடை முறைகளில் செயற்கையில்லாமல் பின்பற்றப்பட்ட மிகப் புராதனமான வழக்கம். இந்த வழக்கம் ஆப்பிரிக்கப் பழங்குடிகள் இடையே பரவலாக இருந்திருக்கிறது. எப்படிப் பார்த்தாலும், எங்கே சுற்றி வந்தாலும் பெண்' அந்நியப்படுத்தப்பட்டு அவள் உடலே அவளுக்கு உரிமை இல்லாத நிலையில்தான் வந்து முடிகிறது. அவளை மேம்பா டடையச் செய்ய வேண்டும். கருத்தடை என்பது பெண் சம்பந்தப் பட்ட சுமையாக விதித்து, அரசும், அரசின் அடிமைகளாகவும் பணம் பறிப்பதற்காகத் தம் இனத்தையே அழிக்கப் புறப்பட்டி ருக்கும் பெண் மருத்துவர்களும் செயல்படுவது, நிச்சயமாகத் தவிர்க்கப்பட வேண்டும். பெண்கள் இயற்கையைக் காப்பாற்ற, பசுமையைக் காப்பாற்ற, வன விலங்குகள் கொல்லப்படுவதைத் தவிர்க்க ஏன் ஒரு பெண்ணைக் குலைத்துக் கொலை செய்த குற்றவாளியின் மனித உரிமைக்காகக் கூடப் போராடத் தயாராக இருக்கின்றனர். கருத்தடைச் சாதனங்கள் ஒரு பெண்ணின் உடலில், அவள் சந்ததியின் உடல் நலத்தில் பாதிப்புக்களை விளைவிக்கின்றன என்பதை மருத்துவ ஆய்வுகள் வெளிப் படுத்தியும் அதைப் பற்றிய உண்மைகளைப் பொதுமக்கள் அறிய எடுத்துரைப்பதில்லை. மகளிர் அமைப்புகள் எப்போதோ கூடும் மாநாடுகளில் கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றி இந்தப் பிரச்னையை முடித்துவிடுகிறார்கள்.