பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. உரிமை மறுக்கும் ஆக்கிரமிப்புகள் தமிழ்நாடு பிறப்புத் தடுப்பு முன்னேற்றத்தில் இந்நாள் நாட்டிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. முதலிடம் கேரளத்துக்கு. "பொறுப்புள்ள தாய்மை’ என்ற பிரசார வாசகம், தமிழகப் பெண்களாலேயே பொருளுள்ளதாகப் பரிணமித் திருக்கிறது. நீயா, நானா என்று ஒன்றுக்கொன்று சவால் விட்டுக் கொண்டு ஆட்சிப்பிடிக்கும் திராவிடக் கழகங்களின் போட்டியின் பயனாக மைய அரசு ஏதேனும் ஒரு பிராந்தியக் கட்சியின் தோள்களில் ஊன்றிக் கொண்டால்தான் உருக்குலைந்து உதிரி களாகப் போவதிலிருந்து மீள முடியும். எனவே மகளிர் நலம், கல்வி, சுகாதார வளர்ச்சி, ஒருங்கிணைந்த முன்னேற்றத்துக்கு ஆதார மான மக்கள் பெருக்கக் கட்டுப்பாடு வளர்ச்சித் திட்டத்தின் உயிர் நாடியாகத் திகழ்கிறது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்ச்சி. மூன்று குழந்தைகள் உள்ள குடும்பத்தின் கடைசிப் பையனுக்கு ஐந்தோ, ஆறோ வயதிருக்கும். அவனை அப்போதைய நாகரிகப்படி, ஆங்கில வழி தொடக்கப்பள்ளியில் சேர்த்தார்கள். பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அடம்பிடிப்பான். வீட்டில் பேசிப் புழங்குவது தாய்மொழியான தமிழ். சிறுவனின் சங்கடம் புரிந்த பெற்றோர் தமிழ் வழிப் பள்ளிக்கு மாற்றினார்கள். பையன் துடிப்புள்ளவன். சிறுவர்களுக்கேயுரிய அறிவுசார் கிரகிப்பு ஆற்றல் மிகுந்திருந்தது. ஒருநாள் தந்தை புதிதாக வந்திருந்த உறவினருடன் ஊர் விவரங்கள் பேசிக் கொண்டிருந்தார். பையன் ஒருபுறம் விளையாட்டு மோட்டார் வண்டியை ஒடவிட்டுக் கொண்டிருந் தான். புதிதாக வந்த உறவுச் சித்தி வாங்கிக் கொடுத்ததுதான். பேச்சுவாக்கில் யாருக்கோ, பையன் ஒண்ணு, பெண் ஒண்ணு என்று சொல்லிக் கொண்டிருந்தது இவன் செவிகளில் விழுந்திருக்க வேண்டும். ஏனெனில், "அவங்க ஆப்ரேஷன் பண்ணிட்டாங்க. இனிமே புள்ள பெறக்காது!’ என்றானே பார்க்க வேண்டும்! புதிதாக வந்த உறவினருக்கும், தந்தைக்கும் தூக்கி வாரிப்போட்டது! இந்த ஆபரேஷன் விவகாரம், அவன் மனதில் எப்படிப் பதிந்தது?