பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 71 அந்தக் காலத்திலேயே இந்தி வழி கற்பிக்கும் 'கேந்திரிய வித்யாலயங்களின் இரண்டாம் வகுப்பு, சமூகக் கல்விப் பாடமே. சுகி.பரிவார், கமி பரிவார்’ என்ற (சிறு குடும்பமே, சுகமான குடும்பம்) குடும்ப நலத் திட்டத்தின் மந்திரச் சொல்லாக இருந்தது. பகுத்துண்டு பல்லுயிர் ஒம்பும் மனித நேய மரபுசார் மந்திரங்கள்’ உயிர் பெறாமலே பிஞ்சு மனங்களில் அடிபட்டுப் போயின. ஆனால், பையன் படிக்கும் தமிழ்வழிப் பள்ளியில் அப்போது அத்தகைய பாடமோ, பட விளக்கமோ இல்லை. சுவர்களில் காணப்படும் வாசகங்களைப் படித்துப் புரிந்து கொள்ளும் முயற்சியும் கூடவில்லை. ஆனாலும், ஆபரேஷன் பண்ணிக் கொண்டால், பிள்ளை பிறக்காது என்பது அவன் மனதில் பதிந்திருந்தது. தெருவில் நடக்கும்போது வண்ணக் கூழாங்கல் கவனத்தைக் கவருவதுபோல், பொறுக்கி சராய்ப் பையில் போட்டுக் கெள்வது போல் இந்தப் புதிய செய்தியை மூளையில் போட்டுக் கொண்டிருக்கிறான். விளக்கை அணைக் காதே! குச்சி கொளுத்தாதே! படுக்கையில் மூத்திரம் வரும், சாமி கண்ணைக் குத்தும் என்று அறிவுறுத்தல்களை அவன் ஏற்ற விதத் துக்கும் இதற்கும் வித்தியாசம் உண்டு. ஒர் ஆண் குழந்தை திறந்த உணர்வுகளுடன் எதையும் வாங்கிக் கொள்ள, ஊக்குவிக்கப்படுவ தாக சூழலே அமைகிறது. ஆனாலும், பெண் குழந்தை இவ்வாறு திறந்த உணர்வுகளுடன் கேட்டதை வெளிப்படுத்துவதில்லை. பூப்புக்குருதியை முதலில் காணும் பெண் மனதளவில் பெரும் அச்சம் கொள்கிறாள். அந்த நேரத்தில் தாய்மாரும், மூத்த பெண் களும் அவள் மருட்சியைப் போக்கும் வகையில் ஆதரவாகச் செயல்பட வேண்டும். இந்த உலக வாழ்வில் உன் பிறப்பு மிக மிக முக்கியமானதென்று அறிவிக்கும் மலர்ச்சி இது; இதற்காகக் கூச்சம், அச்சம் இரண்டும் உன்னைப் பாதிக்கக் கூடாது' என்று அதை இயல்பாக ஏற்க எல்லாத் தாய்மாரும் மன இயல் சார்ந்த நம்பிக்கையை, அவளுக்கு உணர்த்துவதில்லை. இந்த மன இயல் சார்ந்த ஒர் ஆய்வில், மேலை நாட்டுப் பெண்களைவிட ஆசிய நாடுகளில் பூப்பு என்பது மனதளவில், மகிழ்ச்சிக்கு மாறாக மருட்சியைக் கொடுப்பதுதான் உண்மை என்று புலப்படுகிறது. அமெரிக்கக் கிறிஸ்தவ மதப் பிரசாரகராக சீனத்தில் வந்து வாழ்ந்தவரின் மகள், நோபல் பரிசு பெற்ற மிகச் சிறந்த (பெண்) நாவலாசிரியையான பர்ள் எஸ்.பெக். சீனத்தைத் தாய்நாடாகக்