பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../உரிமை... 72 கொண்டு வாழ்ந்தவர். அவருடைய அனைத்து எழுத்துக்களிலும் சீனத்து வாழ்வும் பெண்கள் நிலைகளும் அந்த சமூகமும் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கும். நம் இந்தியப் பெண்களின் மனோபாவங்களையே அந்த இலக்கியங்களில் உணரலாம். கருப்பைச் செயல்பாடுகளின் தாய்த்தன்மையை அவர் தமக்கே உரிய உருக்கத்துடன் எழுதியுள்ளார். அமெரிக்கப் பெற்றோருக்குப் பிறந்த அவருக்கு இதே ஆசிய இயல்புகள் ஒரு புதிய உந்துணர்வை இலக்கியம் புனையக் கொடுத்திருக்கக் கூடும். தாய், நல்ல நிலம், பெண்கள் அணி (Pavilion of women) ஆகிய படைப்புகள் பெண்ணின் இயல்பு களையும் சமூகத்தையும் அற்புதமாகச் சித்தரித்திருக்கின்றன. பெண்ணின் வளர்ச்சி நிலைகளை மருத்துவ அறிவியல் உயிரியல் சார்ந்து, நின நீர்ச்சுரப்பிகளின் (ஹார்மோன்) முதிர்ச்சியின் செயல்பாடுகளால் நிகழ்வதாகக் கண்டறிந்திருக் கிறார்கள். இந்த வளர்ச்சிப் பருவங்கள் குறித்த செயல்கள் வேதப் பாடல்களில் இடம் பெற்றிருக்கின்றன. இந்தப் பாடல்கள் வாயிலாக, ஒரு பெண் வயது வந்து பருவமெய்திய பின்னரே திருமணத்துக்கு ஏற்றவளாகிறாள் என்று அறிந்து கொள்ளலாம். ஒரு பெண் குழந்தையை, சிறுமிப் பருவத்திலிருந்து மூன்று தேவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். முதல்வன், ஸோமன்; இரண்டா மவன், கந்தர்வன்; மூன்றாமவன் , அக்னி. லோமன் உடல் வளர்ச்சியை அளிக்கிறான். கந்தர்வன் பெண் தன்மைக்குரிய வளர்ச்சிகளை, சினைப்பை, கருப்பை, மார்புகளின் வளர்ச்சியை நல்குகிறான். மூன்றாமவன் அக்னி, பூப்பு மலரச் செய்வதுடன், கருவுறுவதற்கான கவர்ச்சியின் பல கூறுகளுக்கும் பொறுப்பேற்கிறான். இவளை ஒரு மனிதன் திருமணம் புரிந்து அணுகும்போது, திருமண நிகழ்ச்சியிலேயே "இவளுக்கு, இனி மனிதனான நான் உரியவனாகிறேன். தேவர்களே! நீங்கள் இனி இவளை விட்டு வேறு ஒர் இளம் பெண்ணை, சிறுமியை நாடிச் செல்லுங்கள். இவளுக்கு உரியவனான என்னை, இவளிடம் நல்ல சந்ததி பெற வாழ்த்திச் செல்லுங்கள்’’ என்று விடை கொடுக்கும் மந்திரம் வருகிறது. அந்தத் தேவர்கள் தாம், இவள் உடலில், உள்ளத்தில்