பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 73 மாறுதல்களைச் செய்யும் நின நீர்ச்சுரப்பிகள், ஈஸ்ட்ரோஜென், புரொஜஸ்ட்ரான் என்ற நிணநீர் சுரந்து, ஆற்றலைக் கூட்டுகின்றன. அழகு பொலிகிறது. பெண்ணுடலின் மார்பகங்கள், பொலிவு பெறுகின்றன. முகம் மலர்ந்து தெளிவடைகிறது. கண்களில் புதிய ஒளி இசைகிறது. சினைப்பை வளர்ந்து, சினை முட்டைகள் அரும்பச் செய்கின்றன. ப்ரொஜஸ்ட்ரான் என்ற சுரப்பியில் வெளியாகும் தாதுவே, மனிதகுல வளர்ச்சிக்கு ஆதாரமாக அடுத்தடுத்து சூல்பைகளைப் பிரித்து, கருமுட்டைகள் வெளி யேறிக் கருவுறத் தயாராக வைக்கிறது. கருமுட்டை, முதிர்ந்து வெளி யேறி விந்தணுவுடன் சேர்ந்து சினைப்பட்டதும் கருப்பையில் வந்து கவ்விப் பொருத்த ஏதுவாகக் கருப்பைச் சவ்வுகளை ஆயத்த நிலையில் வைக்கிறது. நம் நாட்டில் பழைய காலங்களில், ஒரு சிறு பெண்ணின் துடிப்பும் சுறுசுறுப்பும் இயக்கமும் இழைய கல், மண் சரிவுகளில் கலலெவென்று சிரித்துக் கொண்டு துள்ளிவரும் நீரோட்டம் போல் தென்படுவாள். ஆடிப்பாடுவதும், கோலமிடுவதும், உரத்துச் சிரிப்பதும் அவள் இயல்புகளாக இருக்கும். கவடற்றுச் சிரித்து ஏழாங்காய் ஆடுவதும், வீட்டு வேலைகளை ஓர் ஈடுபாட்டுடன் செய்ய முனைவதும், பாட்டி, தாய், சித்தி, மாமி, அத்தை ஆகியோர் நிழலில் மரபுகள் பிடிபட, கதை புராணங்கள், சாமி கும்பிடுதல், குடும்ப விழாக்கள் எல்லாவற்றிலும் ஈடுபாடுடையவளாக வளர்ச்சி பெறுவாள். பள்ளிப்படிப்பு, பாட்டு, நடனம், அறிவுசார் பயிற்சி என்ற கட்டுப்பாடுகள் இல்லாமல் இயற்கையோடு இணைந்து வளர்ந்த சிறுமிகளை இந்நாட்களில் காண முடியவில்லை. ஆறுகள் இருந்த ஊரானால், அச்சமின்றி நீந்தி நீராடிக் களிப்பாள். தம்பி, தங்கைகள் இவள் கண்காணிப்பில் பயமின்றி இருக்கும். தாயும், தந்தையும் உழவர் குடிகளில் வேலைக்குச் செல்வார்கள். கஞ்சியோ, கூழோ பகிர்ந்து கொள்ளும் பொறுப்பும் வந்துவிடும். அந்தச் சிறுமிகள், பூப்பு வந்ததும் சமதளத்தில் வந்துவிட்ட அருவிபோல் ஒரு பொருள் புரிந்த அமைதியில் ஆழ்ந்துவிட்ட முகம் வந்துவிடும். அதை அடங்கிய மலர்ச்சி எனலாம். என்றாலும், பழைய கவடற்ற மகிழ்ச்சி மாயும். என்ன? என்ன? என்ற வினாக்கள் அவளுள் பிறந்து மாயும். இது இயற்கை உணர்த்தும் மாயம்தான். இந்த மாயத்தை அந்தக் காலத்திலிருந்து மரபுகளும், சாத்திர சம்பிரதாயங்களும் அன்றிலிருந்து இன்றுவரை உடலளவில்