பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../உரிமை... 74 உடல் சார்ந்த விழைவையே புரியவைக்கின்றன. அவளுக்கே புரியாத நிலையில் வாழ்க்கையின் புதிர்கள் உடலளவில் மட்டுமே புரிகின்றன. சாதி, மத, குல மரபுகள் எல்லாம் பெண்ணைப் பொறியில் விழுந்த உயிரினமாக மட்டுமே மையப்படுத்துகின்றன. மஞ்சள் நீராட்டல், சடங்குகள், திருமணம், அதுகுறித்த பேரங்கள், கருப்பம், பேறு காலம், கட்டியவனின் ஆணையிலும், அவளைச் சார்ந்த உறவுகளிலும், அடங்கி பிள்ளைகள், குடும்பக் கடமைகள், இன்பம் துன்பம் என்று வாழ்க்கை உருண்டோடுகிறது. பூ உதிர, பிஞ்சுதிர, மழை காற்று என்று அடிபட, பெண் பிறப்புக்கே உரிய ஆசாபாசங்கள் அனைத்தும் அந்நியமாதலில் ஒடுங்க, இந்தியப் பெண், ஆணாதிக்கம் அவளை எவ்வளவு வருத்தினாலும், மீட்டுரு வாக்கம் என்ற பழைய பண்புகளைப் புதுப்பித்துக் கொண்டிருக் கிறாள். இன்னமும் அவள் மனிதப்பிறவிக்குரிய அடிப்படை உரிமையைப் பெற்றுவிடவில்லை. இந் நாட்களில், பள்ளிப்படிப்பு ஆணுடன் போட்டி, எதிர்ப்புகள், எதிர்ப்புகளால் ஏற்படும் உந்து வேகங்கள், வீம்புகள், பொருளாதார சுதந்திரங்கள், எல்லாம் பெண்களின் வாழ்க்கை களை சமூக உணர்வுகளை ஆதிக்கத் தடைக் கற்களில் மோதிச் சிதற வேண்டிய கட்டாயங்களுக்கு உட்படுத்தியிருக்கின்றது. இன்றைய பொருளாதார சமுதாயச் சூழல் இயற்கை யோடிணையும், பல வாழ்க்கைக் கூறுகளையும் பிரித்து, அறிவியல் சாதனைகளாக்கும் ஒர் அந்நியத் தன்மையில் மனிதர் களைச் சிக்க வைத்திருக்கிறது. பொருளாதார மேம்பாடு என்பது மனித மனங்களில் தேவைகளை மிகுதிப்படுத்தும் பண வசதி என்ப தாகவே அறிவுறுத்துகிறது. பெண்மை என்ற இயல்புக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த உண்மைகள், நுகர் பொருள், விளம்பர உலகில் வாரி இறைக்கப்பட்டிருக்கின்றன. ஐந்து வயசுப் பையன், தனக்குக் கிடைக்கும் காசைச் சேமித்து வைத்துத் தாயின் பிறந்த நாளுக்குப் பரிசு வழங்குவதைத் தாய் பெருமையுடன் கூறிக் கொள்கிறாள். பரிசுப் பொருள் இதுதான். மாதவிலக்கு நாட்களில் வேலைக்குச் செல்லும் தாய்க்குத் தேவைப்படும் பஞ்சுக்கவசம்! குழந்தைகள் உலகை அறியப் புகும் பருவத்திலேயே எல்லா ரகசியங்களையும் உணர்த்திவிட வேண்டும் என்ற கல்வி முறையின் ஒரு கூறுதான் இது.