பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../உரிமை... 76 கொள்கிறாள். அவள் ஒரு தொழில் முறைக் கல்வி முடித்ததும் சாதி மரபில், வசதியுள்ள பையனைப் பார்த்து (சாதகம், சோதிடம் உட்பட) கட்டி வைக்க எண்ணியிருக்கிறாள். ஆனால், அந்தப் பெண் சாதி, குல மரபில்லாத, பொருளாதார வசதியில்லாத ஒருவனைக் (காதலித்து) கைப்பிடித்து வீட்டை விட்டு வெளி யேறும் வரையிலும் கூட இந்தப் பெற்றோர் அவளை, அவளது தேவைகளைப் புரிந்து கொள்வதில்லை. ஒரு பள்ளி ஆசிரியை இந்த நிலையில், பன்னிரண்டு வயது மானைவி அறிமுகமில்லாத ஒர் ஆணுடன் பேசிக்கொண்டு நிற்பதைப் பார்த்து விட்டதும், அந்த மாணவியைக் கூப்பிட்டு, பலர் முன்னிலையில் பிரம்பால் அடிக்கிறாள். 'எதற்கடி சீருடை? இதைக் கழற்றிவிட்டு நீ போ! என் பள்ளிக்குக் கெட்ட பெயர் வாங்கித்தராதே!' என்று சீறுகிறாள். அலுவலகங்களில் யார் யார் எந்தெந்த ஆண் அதிகாரிகளைத் தன் வசம் வைத்திருக்கிறாள் என்பன போன்ற சக ஊழியர் மீது கருப்புச்சாயம் பூசும் வம்புகளில் தன் இயலாமைகளை மறைத்துக்கொள்கிறாள். முறையில்லாத கருக்கலைப்புகள், முறையற்ற உறவுகளுக்குத் தீர்வுகளாகின்றன. ஆண் குழந்தைகள் ஆறேழு வயதில் 'ஐ லவ் யூ சொல்வது போல், பெண் குழந்தைகள் முந்துவதில்லை. அவர்களுக்கும் ‘காதல்’ என்பது தொலைக்காட்சி, சினிமா வாயிலாகத் தெரிந்துதானிருக்கிறது. அவர்கள் தாமரை இலைத் துளிகள் அல்ல. கண்ணிர்த் துளிகளாகவே வாழ்க்கை அறிமுகமாகிறது. நமது குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரசார வாசகம் தாமதமான திருமணம், பொறுப்புள்ள தாய்மை’ என்று கொட்டை எழுத்துகளில் காணப்படுகிறது. தாமதமான திருமணம் என்பது கீழ்மட்டங்களில் அறவே கடைப்பிடிக்க முடியாத கோட்பாடு; பொறுப்பற்ற தாய்மையே கிடையாது, பொறுப்பற்ற தந்தைதான் மெய்! 14. காபி- டீ (காப்பர் டி) புறநகர்ப் பகுதியில் நெருக்கடி மிகுந்த வணிக விதியில் அம்ைந்த ஒரு தனியார் மருத்துவமனை. தலைமை மருத்துவர்