பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 77 (ஆண்) நிறுவனர், ஒரு வயதான மூதாட்டிக்கு இரத்த அழுத்தம் பார்க்கிறார். அப்போது, வெள்ளைச் சேலை அணிந்த இரு பணிப் பெண்கள் வாயிலில் தயங்கியவாறு நிற்கின்றனர். மூதாட்டியின் உடல்நிலையைப் பரிசோதிக்கும் வண்ணம் அவளிடம் வினாத் தொடுக்கிறார். பசி, உறக்கம் பற்றிய வினாக்கள். அப்போதுதான் தற்செயலாக நிமிர்ந்தவர், பணிப்பெண்கள் தயங்கி நிற்பதைக் கவனித்து, என்ன? என்று கேட்கிறார். அவர்கள் விடை இறுக்கிறார்கள். 'காபி, டீ என்பது போல் மெல்லிய குரலொலி. பிற்பகல் 3.30 மணி நேரம். மருத்துவமனையின் ஒரு பகுதியில் சிறிய கேண்டீன் உண்டு. காபி, டீ மட்டும் கிடைக்கும். 'கேண்டின்ல காபி - டீ இல்லையா? வெளியில் போய் வாங்கி வரச் சொல்லுங்களேன்?’’ அவர்கள் இன்னமும் நாணமடைந்துதலைகுனிந்து, கைகளால் வாயை மூடிக்கொண்டு சிரிப்பதுபோல் தெரிகிறது. s மருத்துவருக்குக் கோபம் வருகிறது. 'என்னம்மா? பணம் வேண்டுமா? போங்க, வெளிலேர்ந்து வாங்கிட்டு வரச் சொல்லுங்க?' என்று ஒரு நூறு ரூபாய் நோட்டைப் போடுகிறார், மேசை மீது. ஒருத்தி துணிவுடன் முன் வந்து 'இல்ல டாக்டர் காப்பர் டி' என்று விள்ளுகிறாள். மருத்துவர் தலையில் அடித்துக் கொள்கிறார். சாவியை எடுத்து அருகில் உள்ள அலமாரி இழுப்பறையைத் திறந்து அந்தச் சாதனங்கள் அடங்கிய உறையை அவளிடம் கொடுக்கிறார். இது 2001 இல் நிகழ்ந்த சம்பவம். காப்பர் டி' என்பது பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தம் ஒரு கருத்தடை சாதனம். கருப்பைக்குள் இதுபோல் ஒரு சாதனம் செலுத்தப்பட்டால், விந்தணுவும், சினை முட்டையும் சேர்ந்தாலும், கருப்பை ஏற்கெனவே ஒன்றை ஏற்றிருப்பதால், ஏற்றுக் கொள்ளாது என்ற அடிப்படையில் கருப்பைக்குள் செலுத்தப்படும். இத்தகைய சாதனங்கள் பயன் படுத்தப்படலாம் என்று கண்டனர். மிகப் பழைய காலத்தில், அராபியர்களும் துருக்கியர்களும் ஒட்டகங்களில் வெவ்வேறு ஊர்களில் நீண்ட நெடும் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இடைக்காலங்களில் வெவ்வேறு