பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ காபி. . . 78 ஊர்களில் தங்குகையில், ஒட்டகங்கள் கருவுற்றுவிடும். இதனால் பயணம் தடைப்படும். இதற்காக பெண் ஒட்டகத்தின் கருப் பையில் கூழாங்கற்களைச் செலுத்தி விடுவார்கள். பதினொன்றாம் நூற்றாண்டில், இஸ்லாமியு அறிவியலாளரான அவிசென்னா, இதே முறையை மனிதப் பெண்களிடமும் கையாண்டால் கருவு வதைத் தடுக்கலாம் என்று கண்டார். ** பத்தொன்பதாம் நூற்றாண்டில் கருத்தரியாமை என்ற குறையைத் தவிர்க்க இதுபோன்ற சாதனத்தைப் பயன்படுத்தி, கருப்பை வாயைச் சரியாகப் பொருத்திவைக்க கருவுறுவதற்கு வாய்ப்பான சிகிச்சை செய்யப்பட்டு வந்தது. ஆனால், இது போன்ற சாதனங்கள் கருத்தடைக்கும் பயன்படலாம் என்று கண்டார்கள். ஒரு காம்பும் மூடியும் போன்ற சாதனம் உருவாயிற்று. யோனிக்குழாய் கருவாயைச் சென்றடையும் இடத்தில், கருப்பையின் அடிப்பாகத்தில் காம்புடன் கருப் பாதையை அடைக்கும் மூடிபோல் பொருந்தும் சாதனங்கள் பல்வேறு திருத்தங்களுடன் வடிவமைக்கப்பட்டு, பெண்களின் கருவாயில் பரிசோதனை செய்யப்பட்டன. இது, மரம், கண்ணாடி, வெள்ளி, தங்கம், தந்தம் போன்ற சாதனங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டன. (1902) இருபதாம்நூற்றாண்டின் துவக்கத் தில் ஒரு ஜெர்மானிய மருத்துவர், எழுநூறு பெண்களைத் தேர்ந் தெடுத்து அவரவர்க்குத் தேவையான வடிவங்களில் செலுத்தி, கருத்தடை சாதனப் பரிசோதனை மேற்கொண்டார். இவற்றில் சில கருக்கலைப்புக்கும் பயன்பட்டன. ஆனாலும், இவை, கடுமையான நச்சுத் தொற்றுப் பாதிப்பை 'விளைவித்து, மருத்துவருக்குக் கெட்ட பெயர் கொண்டு வந்தன. (இதில் எத்தனை பெண்கள் பலியாயினரோ?) பின்னர், 1909 இல் இன்னொரு ஜெர்மானிய மருத்துவர், பட்டுப்புழு நரம்பினால் ஆன வளைய சாதனத்தைப் பயன் படுத்தினார். இதுவே இன்னும் சில மாறுதல்களுடன், பட்டுப்புழு நரம்பு, மெல்லிய வெள்ளி இழைகளால் இணைக்கப்பட்டு, நல்ல பயனுடைய சாதனமாகக் கண்டார்கள். 1934ஆம் ஆண்டில் 'ஒட்டா' என்ற ஜப்பானிய மருத்துவர் தங்கத்தாலோ, பொன் முலாம் பூசிய வெள்ளியாலோ செய்யப்பட்ட ஒரு வளையம் தயாரித்தார். இந்தச் சிறு வளையத்தின் நடுவே ஒரு சிறு தகடு மூன்று ஆரங்களால் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால், தொடக்க