பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 79 கால வரவேற்பும் ஆரவாரமும், தோன்றிய விரைவில் அமுங்கி, 1936 லேயே ஜப்பானிய ஐரோப்பிய அரசுகளாலே தடை செய்யப்பட்டன. ஏன்? கடுமையான நச்சுத் தொற்று விளைவுதான். பெண்ணின் கருப்பையும் பாதிக்கப்பட்டது. ஆனால், சில ஆண்டுகளுக்குப் பின்னர் 1959 இல் இதுபோன்ற வளையங்கள் பிளாஸ்டிக் போன்ற நவீனப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டன. இது தொடர்பான ஆராய்ச்சிகள் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் தொடர்ந்து நடைபெற்றன. உலகளாவிய மாநாடுகளில் பல பல மருத்துவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் இந்தக் கருத்தடைச் சாதனங்களின் பயன்பாடு, எளிமையாகவும், மிக நம்பகத் தன்மையுடையதாகவும் இருக்கவேண்டும் என்ற இலக்கில் அமைந்திருந்தன. லூப் என்ற சாதனம்தான் இந்தியாவில் முதன் முதலாக அறிமுகமான கருத்தடைச் சாதனம். இது பாலிதிலீன் என்ற நவீனமான பொருளால் வடிவமைக்கப்பட்ட வளையம். இது முதலில் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டாலும், ஒரு சிறு குழாய் மூலம் உள்ளே செலுத்தலாம். ஏனெனில் அந்தச் சாதனம் தேவைக் கேற்ப ஒடுக்கிக்கொண்டு சென்று, பின்னர் பொருந்தும் வடிவில் அமையும். அமெரிக்க மருத்துவரான லிப்பே என்பவர் வடிவ மைத்த இந்த லூப் சாதனம், பொதுவாக எத்துணை மாறுதல் களுக்கும் மேம்பாட்டுக்கும் உட்படுத்தப்பட்டாலும் கருப் பைக்குள் புகுத்தும் சாதனம் "லூப்’ என்றே குறிப்பிடப்படுகிறது. முன்பு குறிப்பிடப்பட்ட காப்பர் டி- இந்த சாதனத்தின் ஒரு திருத்தம் பெற்ற வடிவுதான். இதை வைத்துக்கொண்ட பெண்ணால் இதை உணர முடியும். அதன் நுனியில் ஒரு நூல் இணைக்கப்பட்டு தொங்கும். எளிதில் அகற்றிவிடலாம். பொதுவாக, இந்தச் சாதனங்கள் தொடக்கக் காலத்தில் அதிக ரத்தப்போக்குடன் வெளியேற்றப்படுபவையாகவே இருந்தன. ஒவ்வொரு சாதனமும், நூறு நூறு மகளிரின் கருப்பைகளை, யோனிக் குழாய்களைச் சோதனைக்களங்களாக்கிய கொடுமை, ஏனென்று கேட்பவர் இல்லாமலே நிகழ்ந்துவந்திருக்கிறது. கண்களில் தூசி விழுந்தால், கண் சிவக்கிறது; எரிச்சல் உண்டாகிறது. துாசி வெளியேற்றப்பட வேண்டும் என்பதன் அறிகுறி. உள்ளங் காலில் முள் தைத்தால் உறுத்தல், சீழ் வைத்தல் என்பது முள்ளை வெளியேற்ற சமிக்ஞைகள் வந்து மனிதரை இயங்கச் செய்கின்றன.