பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் - 81 ஒவ்வொரு மாதத்துக்கும், ஒர் இலக்கு வைத்து இத்தனை பேருக்கு இந்தக் கருப்பை நுழைப்புத் தடுப்புச் சாதனம் புகுத்தும் விவேகமற்ற செயல் மேற்கொள்ளப்பட்டது. (இடம், கோவா. அப்போது அது மாநிலமாக இருக்கவில்லை; மைய அரசுக்குட் பட்ட பகுதி. போர்த்துக்கீசியப் பிடியில் இருந்து விடுபட்டு மகாராஷ்டிரத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையேயான மோதலிலும், பரிசயமில்லாத கட்சி அரசியல்களிலும், பட்டுக் கொள்ளாத மேல் மக்களிடமும் தவித்த கிராம மக்கள், கத்தோலிக்க கிறிஸ்தவர்; இந்துக்கள் என்ற பிரிவுகள் தெரியாத எளியர்) இவர்கள் தாம் "லூப்’ சோதனைகளுக்கு ஆளானார்கள். அந் நாட்களில் சுகாதார மையங்கள் மருத்துவமனைகள் மிகக் குறைவு. ஏழைப் பெண்கள் இரத்தப்போக்கில் நலிந்தும், லூப் வெளி யேற்றப்பட்டதுமான பத்திரிகைச் செய்திகள் அதிகமாக வெளி வந்தன. லூப் சாதனம் வெளியேற, அந்தப் பெண் கருவுற்ற செய்தியும் வந்தது. பெண் பிறந்தால் லூபிகா என்றும், ஆண் பிறந்தால் லூபா என்றும் பெயர் வைக்கலாம் என்றும் எள்ளல் வார்த்தைகள் அடிபட்டன. இதற்குப் பிறகு இந்தச் சாதனம் தமிழ் நாட்டில் கூடச் செல்வாக்குப் பெறவில்லை. மிகப் பெரும்பான்மை யான மக்கள், கருத்தடை என்ற சொல்லையே அமங்கலமாகக் கருதியதுதான் முதற் காரணம். சுதந்திரத்துக்கு முன் உலகப்போர் நடைபெற்ற காலத்திலும் பின்னும் வேலை வாய்ப்புக்கான கல்வி இல்லாமை, போரின் விளைவால் ஏற்பட்ட அரிசி முதலான வாழ்வாதாரப் பொருட் களுக்கான பஞ்சம், சுதந்திரக் கிளர்ச்சி, பின் தொடர்ந்த அரசியல் நிலவரங்கள் இருந்தாலும், குழந்தைப் பேறுகளைத் தடுக்கலாம் என்ற எண்ணத்துக்கே இடம்கொடாமல் அடுத்தடுத்து குழந்தை களைப் பெற்றார்கள். பேறுகால மரணங்கள், சிசு மரணங்கள் மிகச் சாதாரணம். மேல்நாட்டு நாகரிக மோக விளைவுகளால் ஆயிரங்களில் ஒரிரு குடும்பங்கள், களிம்பு போன்ற கருத்தடை சாதன இரகசிய அறிக்கைகளை அறிந்திருந்தாலும், பயன்படுத்து வது குடும்ப நெறிக்கு ஒவ்வாதது என்ற அற உணர்வில் ஒடுங்கினார்கள். ஏனெனில் கருத்தடை, கருக்கலைப்புகள் எல்லாமே நெறியற்ற பெண்கள் ரகசியமாகக் கையாளும் செயல் களாகவே கருதப்பட்டன. மேலும் புதிய பொருளாதாரத் திட்டங் களின் விளைவாக இடம் பெயர்தலில், கிராம மரபுக் கட்டுக் ЭP_ - 6