பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ காபி... 82 கோப்புகள் குலைந்தன. மேலைநாடுகளில் இளம்பருவ ஈர்ப்புகளின் ஒரு பெருக்கமே இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட மரபுக் குலைவுகளின் விளைவு என்று கருதப் பட்டது. பெண்கள் இந்தச் சூழலிலும், தனிக்குடித்தனம் என்ற தாராளமயங்கள் தோன்றின. இங்கோ, கூட்டுக் குடும்பங்கள் உடைந்தன. பள்ளிக் கல்வி முடித்து, ஆசிரியர் பயிற்சிக்கோ, செவிலியர் பயிற்சிக்கோ செல்வது சாதாரணமாகக் கருதப்பட்டது. முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலேயே அரசு மருத்துவமனைகளில் குடும்ப நலம், குடும்பக் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கான பிரசார வாசகங்கள் எழுதப்பட்டன. அந்நாட்களில் வழக்கமான ஆசிரியர் பயிற்சிக்கு மாறாக, கிராம சேவிகா, முக்ய சேவிகா என்ற பெயரில் புதிய ஐந்தாண்டுத் திட்ட வளர்ச்சிப்பிரிவில் பல இளம் பெண்கள் பயிற்சி பெற்றனர். இவர்கள் ஆங்காங்கு கிராமங்களில் மண்டல வளர்ச்சித் திட்டப் பிரிவில் கிராமங்களில் விழிப்புணர்வைக் கொண்டுவர, மக்களிடையே சிறுகுடும்ப யோசனைகளைப் பரப்ப நியமிக்கப்பட்டனர். அரசு ஆதரவுடன் மகளிர்நலத்துறை சார்ந்த பெண் அதிகாரிகள் ஜீப் வாகனங்களில் பயணித்துப் பார்வையிடு வார்கள். மகளிர் சங்கங்களை இந்த சேவிகைகள் உருவாக்குவதோ, மகளிருக்குச் சிறுகுடும்ப உணர்வோடு கட்டுப்பாட்டு முறைகளை விளக்குவதோ, இயலாத பணிகள் எனலாம். இந்த இளம் பெண் பயிற்சி பெற்றும், தனியாக ஒரு கிராமத்தில் சென்று யாரிடம் பேசுவாள்? அதுவும் பரிசயமில்லாத மலை மாவட்டத்திலோ, பழங்குடி பிரதேசத்திலோ எதைப் பேசுவாள்? கிராமப் பெரியவர்கள், பெண்கள் அனுபவம் மிகுந்தவர்கள்; முதியவர்கள். எங்கும் யாரிடமும் சென்று பிரசாரம் செய்ய முடியாது. சுவரொட்டி பிரசாரங்களைப் படிக்கத் தெரியாது. இந்த இளம் பெண்ணே நாணி, எதுவும் பேசமுடியாமல், கிராமங்களுக்கு விஜயம் செய்ததாகப் பொய்க்கணக்குக் காட்டத் தான் முடிந்தது. தையல் இயந்திரங்கள், கம்பளி நூல்கள், பால் பவுடர் எல்லாம் ஆங்காங்கு மேலிடத்தார் பயன்படுத்தப் போயின. கணக்கில் வராத ஊழலுக்கு முதல் வித்துகள் இந்தத் திட்டங்களில்தான் இடம் பெற்றன. காந்திய அற நெறியில் நின்ற பெண் அமைச்சர்கள் தாம் அந்நாட்களில் 'சுகாதார அமைச்சர் களாக இருந்தார்கள். 'ஒன்று விதைத்தால் ஒன்பது விளையட்டும்; சந்ததி பெருகட்டும்’ என்று மண்ணின் விளைவுக்கும் மக்கள்