பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் - 83 பெருகவும் வாழ்த்துவதையே மரபாகக் கொண்ட மக்களை எப்படி மாற்ற முடியும்? ஒருபுறம் காடுகள் அழிந்தன. நதிகள் தூய்மை இழந்தன. காலம் காலமாக அமைதியுடன் வாழ்ந்த விலங்கினங்கள், பறவையினங்கள், ஊர்வன, பூச்சி, புழுக்கள் போன்ற கோடானு கோடி உயிரினங்கள், பாறைகள் பிளக்கப்பட்டுப் பேரோசைகளில் அதிர்ந்து அல்லோலகல்லோலமாயின. மண் விளைவில் வாழ்வு கண்ட மக்கள் வேரோடு பெயர்ந்து பணம், புழுதி, பேராசை போன்ற மாறுபட்ட சூழலில் நிலைகுலைய உழைப்பை நல்கினார்கள். சுதந்திரம் பெற்ற பின் நாடு மத அடிப்படையில் துண்டாடப் பட்டபோது, எத்தனை எத்தனை பெண்கள் சொல் லொணாத கொடுமைகளுக்கு ஆளாயினர். இந்த மதச்சார்பின்மை அரசியலிலும் எந்த மதமேனும் பெண் கொடுமைகளை ஒரு மனித உரிமைக் கண்ணோட்டத்துடன் அணுகியதுண்டா? எதிர்த் துக் குரல் கொடுத்த இளம் பெண்ணின் தலைக்கு விலை; தண் டனை பெறுகிறாள். மதச்சார்பின்மை என்று மார்தட்டும் அண்டை நாடு அவளுக்கு அடைக்கலம் கொடுக்க அஞ்சும், அவள் நூலைத் தடை செய்யும் நடவடிக்கைகளில்தான் தன் நடுநிலைமையை வெளிப்படுத்திக் கொள்கிறது. இன்னும் நினைக்கவே சில்லிட்டுப் போகும் வன்முறைகள் பெண் உடலில் அரங்கேற்றப்படுகின்றன. நியாயங்கள் வழக்குமன்றக் கண்துடைப்பு சாட்சிக் கூண்டுகளில் கழுத்து நெறிக்கப்படுகின்றன. மக்களின் வரிப்பணம் இத்தகைய வழக்குகளில் கோடி கோடியாக விழுங்கப்படுகின்றன. இத்தகைய பின்னணிகள் அன்றிலிருந்து இன்றுவரை மாறவில்லை. எனவே அறிவுசார் முன்னேற்றங்களில் தன் திறமைகளைப் பெண் விளக்கினாலும், ஆணாதிக்க நீரோட்டத்தில் கரைந்துபோகிறாள். 15. மரபுகளில் சிக்கிய மருத்துவக் கட்டுப்பாடுகள் ஒரு சித்திரம் - புதிதாக உருவாகும் புறநகர்ப் பகுதி. புதிய தனி வீடுகள். சுற்றுச் சுவர்கள், தோட்டம் என்று நீர்ப்பஞ்சம் அதிகமாக உணரப்படாமல் ஒய்வு பெற்ற குடும்பத்