பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../மரபுகளில்... 84 தலைவர்கள் ஆர்வமாக இருந்த காலம். அந்தப் பகுதிக்கு அருகில் இருந்த கிராமத்தில் இருந்து ஒருவன் தோட்டவேலை தேடிவருகிறான். தோட்ட வேலைக் கென்று மாத ஊதியம் கொடுத்து வைத்துக் கொள்ளும் உயர்படிக் குடும்பக்காரர் அங்கு குடியேறியிருக்கவில்லை. எல்லோருமே இடைநிலை வருக்கக்காரர்கள்தாம். 'வேலை இருக்குங்களா?' என்று வருபவன் கூழையாக, அரையில் ஒர் அழுக்கு வேட்டியும், ஒரு பழைய சட்டையும் அணிந்து தலையில் ஒர் அழுக்குத் துண்டை முண்டாசாகக் கட்டி இருக்கிறான். தோளில் களைக் கொட்டை விடச் சிறிது பெரிய அளவிலான மண்வெட்டி, வேலிகளில் படரவிட்டிருந்த முட்செடி தாவரங்களைச் சீரமைக்க வோ, பாதாள சாக்கடை இல்லாத வீடுகளில் புழங்கும் நீர்க்கால்வாய்களை, வாழை மரங்களுக்கோ, வேறு புதிய காய்கறிச் செடிகளுக்கோ திருப்பவோ, புதிய கன்றுகளை நடுவதற்கான குழி வெட்டவோ வேலை கிடைக்கும். நாள் முழுவதுக்குமான வேலை கிடைக்காது. இரண்டு ரூபாயிலிருந்து ஐந்து ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்காது. அநேகமாக வேலை கிடைத்த வீடுகளில் காபி, மீதமான சோறு, தண்ணிர் கிடைக்கும். அந்தப் பகுதியில் அவன் இவ்வாறு வேலை தேடி எல்லா நாட்களும் வருவான். அந்தப் பகுதியில் கோயில்கள், பள்ளிக் கூடங்கள் தவிர, புதிய தாய் - சேய் மருத்துவமனையும் இடம் பெற்றிருக்கிறது. ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல அமைப்பின் ஆதரவுடன் சிறார் இல்லம், காப்பகம் கூட இயங்கி வந்தது. அந்தச் சுவர்களில் குடும்ப நல திட்ட வாசகங்கள், சிவப்பு முக் கோணச் சின்னம். வயிற்றுப் போக்கின் காரணமாகக் குழந்தைகள் இறப்பதைத் தடுக்க, சர்க்கரை - உப்புக் கரைசலைத் தயாரித்துக் கொடுக்கும் முறை, தடுப்பூசிகளின் அவசியம் போன்ற அனைத்து அறிவுரைகளும் படவிளக்கங்களுடன் தீட்டப்பட்டிருந்தன. அப்பகுதிக்குள் யார் நுழைந்தாலும் அவர்களைக் கவரும் கட்டிடப் பகுதி அது. இந்தத் தோட்டக் கூலிக்காரனும் இதே வழியில் தான் வருவான். அந்த மருத்துவமனைக்குப் புதிதாக வந்த மருத்துவப் பெண்மணி, தன் வாடகைவிட்டில், வேலி கட்ட அவனை அழைத்தாள். அந்த அம்மை எளிமையானவர், சமூக உணர்வு மிகுந்தவர். குடும்ப நலத்திட்டத்தில் இவன் எந்தளவு விழிப்புணர்வு பெற்றிருக்