பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 85 கிறான் என்று அறிய ஆர்வம் கொண்டார். 'எங்கிருந்தப்பா வரே? 'இங்கதாங்க... நன்மங்கலம் பக்கம்.' 'விவசாயம் பண்ணிட்டிருந்தியா?” "ஆமாம்மா, கூலி உழவு தான். கடம் அதிகமாயி, ஒரு மாட்ட வித்திட்டே. இப்பக்கூட ஒரு அஞ்சு நூறு இருந்தா, உழவுக்குப் போவே...' "ஆமா, நிதம் இப்படி வந்துதா வேலையா உனுக்கு?’’ 'அ...ஆமாங்க.. இங்க வருவே. மாடம்பாக்கம் சேலூர் பக்கம் போவே. எதுனாலும் வேல கெடக்கும்.' '... பாவம்.. ' என்று மருத்துவர் மனதில் எண்ணிக்கொண்டார். 'உங்கப்பா ம்மா வேலை செய்யறவங்கதானா? உனக்கு அக்கா தங்கச்சி இருக்காங்களா?” 'அவங்கல்லா இங்க இல்ல.. செய்யாறு பக்கம்...' 'அப்ப. நீ மட்டும்தானிருக்கியா?” 'ஏங்க? எனக்குக் கலியாணமாயிட்டுதுல்ல?” மருத்துவர் அவன் திருமணமாகாத இளைஞனாக இருப்பான் என்று எண்ணினார். உடனே தன் விசாரணைகளைத் துவங்கினார். 'பிள்ளைங்க இருக்கா?’’ 'ஒஇருக்குங்க! ரெண்டு பொம்புளப்புள்ள ரெண்டு ஆம்புளப் புள்ள. இப்பவும் கூட முழுவாம இருக்குங்க. ' மருத்துவர் அதிர்ந்தாற்போல் பார்த்தார். அவனுக்கு அவர் குடும்பக் கட்டுப்பாட்டு மருத்துவம் செய்ய வந்திருக்கும் புதிய தாய் சேய் நல மருத்துவமனை மருத்துவர் என்று தெரியாது. தெரிந்திருந்தால், அந்த வீட்டுக்கு வேலை செய்ய வந்திருப்பானோ என்னமோ? 'ஏம்பா? குடும்பத்துக்கு இந்த வருமானம் போதுமா? உம் புள்ளங்க ஸ்கூலுக்குப் போறாங்களா?'