பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் - 87 வாணான்னிட்டம். ஏம் பொய் சொல்லனும்?’’ 'நம்ம நாட்டுல சுதந்திரம் வந்து நம்மள நாமளே ஆட்சி பண்ணுற ராச்சியம் நடக்குது. வூடு மாதிரிதாநாடும். சாமிசத்தியம்னு நம்புற சாமி காப்பாத்தலியே? நீ மண் வெட்டியத் துக்கிப் போட்டுட்டு வந்து ரெண்டு ரூபா கூலிக்கும் மூணு ரூபாய் கூலிக்கும் சாமி அலைய வைக்கலாமா? சாமியா வந்து காசு குடுக்கிறாரு?’’ 'இதெல்லாம் எனக்குப் பேசத் தெரியாதுங்க. சாமி குடுக்கிற புள்ளய வேணாம்னு சொல்லுறது பாவம். எம் பொஞ்சாதி அதுனால சருக்காரு ஆசுபத்திரிக்கே போவாது...” 'அப்ப? பேறுகாலத்துக்கு என்ன பண்ணும்?’’ 'அவ ஆத்தா வருவா. கேவுரு கடல, அது இதுன்னு கொண்டிட்டு வருவா. எல்லாப் புள்ளயும் அப்பிடித்தா...' மருத்துவர் வாயடைத்து நிற்க வேண்டியதாயிற்று. இருந்தாலும், இந்த ஒரு புள்ளியை எப்படியேனும் பிடிக்க வேண்டும் என்று முனைகிறார். 'ஏம்ப்பா? எப்பவும் அப்பிடி இருக்குமா? முதல் புள்ளக்கி ரெண்டு வயசாகல. இது அஞ்சாம் பிரசவம். எதுக்கும் பாதுகாப்பா ஆசுபத்திரிக்குக் கூட்டிட்டுப் போலாமில்ல. இந்த ஆசுபத்திரில அல்லாம் நல்லாப் பாக்கிறாங்கப்பா? இதுக்குன்னே சருக்கார் பணம் செலவழிச்சிக் கட்டிருக்கு. டாக்டரம்மா, ரெண்டு பேர், நர்ஸ், ஆயா, எல்லாம் இருக்காங்க. உம் புள்ளங்களுக்குத் தடுப்பூசி போட்டீங்களா?’’ 'சருக்கார் ஆசுபத்திரி மோசமுங்க! எங்க ஊருல, ஒரு பொம்புள சருக்கார் ஆசுபத்திரின்னு போச்சுங்க. முதக்க ஒரு பொம்புளப் புள்ள, பின்னாடி ஒரு ஆம்புளப் புள்ள. மூணாவது பிரவசத் துக்குப் போச்சி. புள்ள பிறந்து, ஒரு மாசத்துல செத்துப்போச்சி. புள்ள கழுத்தே நிக்கல. அவளுவ எப்பிடியோ போட்டிழுத்து, புள்ளய சாகடிச்சிட்டாளுவ. அல்லாம் சொல்றாங்க. ஒரு பொம் புள, ஆம்புள ரெண்டும் இருந்திச்சின்னா, மூணாவத இப்பிடித்தா சாக அடிச்சிடுவாளுவன்னு. வானாம் சாமி!' இவனிடம் பேசிப் பயனில்லை என்று கண்ட மருத்துவர், வேலை முடிந்து கூலியைக் கொடுக்கையில், ஆயா, அவளுடைய ஒன்றரை வயது ஆண்