பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../மரபுகளில்... 88 குழந்தையைக் கொண்டு வருகிறாள். 'அம்மா? நம்ம புள்ளயா?” "எங்க புள்ளதாம்பா..." 'அப்படீங்களா?' என்று முகமலர்ச்சியுடன் குழந்தையைக் கை தொட்டு முத்தம் வைத்துக் கொள்கிறான். 'நம்மையா எங்க வேலையாருக்காங்க?" 'அவங்க வெளிநாட்டில இருக்காங்க..” என்று கூறிக்கொண்டு மருத்துவர் உள்ளே செல்கிறார். 'இந்தாப்பா, இந்த விதையெல்லாம் ஒரமாப் போட்டு வை. அப்பப்ப வந்து பாத்திட்டுப் போ...' 'அவன் மகிழ்ச்சியுடன், சூரிய காந்தி விதையாம்மா? நல்லா வரும். நல்ல மண்ணு' என்று ஆர்வமாக ஊன்றுகிறான். வாயில் மூலைக் கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கை கால் முகம் கழுவிக் கொள்கிறான். 'ஆயா, இந்தாளுக்குக் காபி கொஞ்சம் கொண்டாந்து குடு..!" மகிழ்ச்சி தாங்கவில்லை. 'நல்ல அம்மா’’ என்று காபியை வாங்கிக் குடிக்கிறான். கூலி ஐந்து ரூபாய். முண்டாசைக் கட்டிக் கொண்டு வாய்நிறையச் சிரிப்புடன் சென்றவன் பிறகு வரவேயில்லை. யாரேனும் அவனுக்கு அவள்தான் அந்த மருத்துவமனை மருத்துவர் என்று சொல்லியிருப்பார்களாக இருக்கும். அதே ஆளின் மனைவி, பிரசவம் ஆகாமல் நஞ்சு வெளியேறி ஆபத்தான நிலையில் ஒரு நாளிரவு கொண்டு வரப்படுகிறாள். மருத்துவரால் தாய், பிள்ளை இரண்டையும் காப்பாற்ற முடிய வில்லை. மறுநாளே மருத்துவர், அந்த வீட்டைக் காலி செய்து கொண்டு இரவுக்கிரவாக வெளியேற வேண்டிய சூழல் உரு வாயிற்று. அதே கிராம மக்கள், ஆட்சியாளருக்கு எதிரான கட்சி யாட்கள், பிரசவத்துக்கு வந்த அவளைக் கொலை செய்து விட்ட தாக மிரட்டி வெளியேறச் செய்தார்கள்.