பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் - 89 அரசுத் திட்டம், குடும்பக் கட்டுப்பாடு என்ற விஷயத்தில் மக்களின் ஒத்துழைப்பைப் பெறவேயில்லை என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்று. பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற இடங்களில் அன்றைய தமிழ்நாட்டு கிராமத்தானின் மனப்பான்மையுடன் மக்கள் குடும்ப நலத்திட்டங்களை இன்னும் ஏற்காதவர்களாகவே இருக்கின்றார்கள். இன்றும் இந்த மக்களின் மக்கள் பெருக்கம் அந்த மாநிலங்களிலேயே மையம் கொண்டிருக் கிறது. அறியாமையும், அவ்வாறே, அகன்றிருக்கவில்லை. இன்னும் பத்தாவது திட்டம் போடப்பட்டும், பிரதமர் நூறு குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தால், ஐந்து வகுப்புகளை எட்டு முன் மாம்பிஞ்சுகள் உதிர்வதுபோல கல்வி கற்றல் என்ற வளர்ச்சி பெறாமலே உதிர்ந்து போகிறார்கள் என்று தெரிவிக்கிறார். கேரளம், புதுச்சேரி, தமிழ்நாடு போன்ற தென்னகப் பகுதிகள் மட்டுமே சாதனைகளை எட்டும் பாதையில் அறைகூவல்களைச் சந்தித்தாலும் முன்னேறுகின்றன. ஆனாலும், மக்கள் பெருக்கக் கட்டுப்பாட்டுக் கொள்கையில் அரசு ஒருங்கிணைந்த செயல்பாடு களை நிறைவேற்ற இயலவில்லை. இதற்கு முதல் காரணம், மக்கள் மிகப் பெரும்பான்மையானவர்கள், ஆட்சி பிடிக்கப் போட்டி போடும் கட்சிகளுக்கு வாக்கு வங்கிகளாகத்திகழ்வதாலும், அதைத் தவிர அரசின் செயல்பாடுகளுக்கும் ஏழைக் கிராமத்தானுக்கும் எந்த ஒரு புரிந்துணர்வும் இல்லை என்பதாலும்தான். வளர்ச்சித் திட்டங்களும், அவ்வப்போதைய ஆளும்கட்சி மிகச் சிறுபான்மை யான கற்றறிவாளரான, போட்டி அரசியல் கட்சியாளரைச் சரிக்கட்டும் வகையில் ஆதாயம் காண்பதற்கே போடப் படுகின்றன. 55 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில், இந்திய ஜனநாயகம் பத்து வளர்ச்சித் திட்டங்களின் பலன்களில் குறிப்பாக, வறுமைகளே பெண்களின் வடிவில் தோற்ற மளிக்கிறது. ஆட்சியாளர், சினிமா, தொலைக்காட்சி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்காரர், பெரும் பெரும் ஒப்பந்தப் புள்ளி களின் தயவில், வன்முறைகள் என்ற கொடுரங்களை உள்ளடக்கிய தாக, இயற்கையின் சீற்றங்களையும், அப்போது மலரும் மனிதத்தன்மைகளையும் அரசியல் கொள்கைகளுக்குச் சாதக மாக்கிக் கொள்ளும் மதி நுட்பங்களை வளர்த்திருக்கின்றன. காந்திய நெறி பேசப்படுகிறது. குறுக்குவழியில் ஆட்சி பிடிக்க விரைந்து, ஏதோ ஒரு சட்டத்தால் அது நழுவியபோதும், பதவி