பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../மரபுகளில்... 90 வேண்டாம் என்று அரசியல் காய்களை ஆட்டுவிக்கும் சக்தியாக' அமைந்தவரை, புத்தர் என்றும் இயேசு என்றும், காந்தி என்றும் ஒப்பிட்டுப் போற்றும் துதிமாலைகளுக்குப் பஞ்சமே இல்லை. எனவே இந்திய நாட்டின் உண்மைப் பிரதிநிதி ஜனநாயகத்திலும் ஐக்கியமாகிறான். எப்படியேனும் பதவியில் அமர்ந்தவர், கடவுளாகிறார். கடவுள் இல்லை என்றும், கடவுளை நம்புபவன் முட்டாள் என்றும் அடித்துச் சொல்ல ஒர் இயக்கத்தையே தோற்றுவித்தவர் இல்லை. அவர் கொள்கையைக் கூடச் சொல்லார். திரைப்பட நாயகர், தட்டியில் இருந்தாலும், பாலபிடேகம் பெறுகிறார்; கோயில் சிலைகளிலும் இடம் பெறுகிறார். Fol H யல்) 16. நெருக்கடி கால (அரசு அலங்கோலங்கள் 1 975.” ஆண்டுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அது ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பில் மகளிர் ஆண்டாக உலகெங்கும் கொண்டாட (?) அறிவிக்கப்பட்டிருந்தது. நவராத்திரி, ஆடி வெள்ளி, தைவெள்ளி ஆகிய நாட்கள் தென்னிந்திய சநாதன மரபில் (இதுபோல் வடமாநிலங்களிலும் கார்வா செளத் போன்ற நாட்கள் உண்டு) சுமங்கலிப் பெண்களை அழைத்து மஞ்சள், குங்குமம், மலர்கள், பட்டு ரவிக்கைத் துண்டுகள், சீப்பு, கண்ணாடி என்ற வகையில் வழங்குவார்கள். இது தவிர, 'சுமங்கலி" வழிபாடு என்ற வகையில் அதிகப்படியாக சுமங்கலிகளை அழைத்து, விருந்து வைத்து, முன்கூறப்பட்ட பொருள்களை வழங்கி துப தீப ஆராதனையுடன் அனுப்பி வைப்பார்கள். இந்த வழிபாடு வெவ்வேறு சாதி மரபுகளில் வெவ்வேறு வகையில் கொண்டாடப் படுகிறது. பெண்களைப் பட்டினி போட்டும், சதிக் கொடுமையில் எரிய வைத்தும், குலைத்தும் கொன்ற பாவங்களுக்கு இந்த வழிபாடு பரிகாரங்களாகத் தோன்றியிருக்கிறது எனலாம். பெண் வதை இல்லாத குடும்ப மரபு மிக அபூர்வம். குடும்பங்களில் திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சி நடக்குமுன், இந்த வழிபாட்டை முன்னின்று நடத்துவார்கள்.