பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 91 ஆனால், கணவன் இறந்துபோன பின் ஒரு பெண் வதைபடுவதை, சமூகம் அவளுக்குரிய தண்டனையாகவே கருதுகிறது. அவர்களுடைய 'ஆன்மா' அமைதியடைய எந்த வழிபாடும் இல்லை. அனைத்துலக மகளிர் ஆண்டு கொண்டாடப் பட்டபோது, நடந்த நிகழ்வுகள், கூட்டங்கள், பாராட்டுகள், பரிசுகள் எல்லாமே மஞ்சள் குங்குமம் வழங்கப்படும் நிகழ்ச்சிகள் போலவே தோன்றின. பிருந்தாவனத்தில் குஞ்சவிஹாரி கோயிலிலும், காசியிலும், அப்போதும் தலைமுண்டிதம் செய்யப்பட்டு, தங்களுக்குக் கிடைக்கும் அற்ப வயிறாதாரத்துக் காக, ஆயிரமாயிரம் கோபியர்களுடன் லீலை செய்த கண்ணனைப் புகழ்ந்து பாட வேண்டியிருந்தது! இந்தப் பெண்கள், வழிபாட்டுக்கு உதவாத அபாக்கியவதிகள்! தேவதாசி முறைகளை ஒழித்து, அதே தொழிலை, உலகமயமாக்கித் திறந்து விட்டிருக்கிறது. இதுவும் முன்னேற்றம்தான்! அனைத்துலக மகளிர் ஆண்டில் இந்திய அரசாட்சியில் மிக முக்கியமான ஒரு திருப்பம் நிகழ்ந்தது. அப்போது நாட்டை ஆண்டு வந்த நேரு மகள் இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்று அலகாபாத் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. காரணம், இதுதான் : தேர்தலுக்கு அரசு அதிகாரிகள் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்திரா அம்மை அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் குற்றவாளிக் கூண்டில், மூன்று மணி நேர விசார ணையைச் சந்தித்தபின், பிரசித்தி பெற்ற இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் ஜூன் மாதத்தில் 25ம் தேதி வழங்கியது. இந்திரா பதவி விலக வேண்டும். இந்திரா பதவி விலகியிருப்பார் என்றும் அவருடைய இரண்டாவது மகன் சஞ்சய் காந்தி, தாயின் ஆலோசகராகச் செயல்பட்டு 26ம் தேதி நள்ளிரவே, நாட்டில் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தும் அதிரடித் தீர்ப்பை வெளியிடச் செய்தார் என்றும் அரண்மனை இரகசியங்கள் பின்னர் வெளியாயின. எது எப்படியோ? ஜூன் 26ம் நாள் 1975 இல் இந்தியாவில் அவசர நிலை பிரகடனமாயிற்று. அவசரம் அல்லது நெருக்கடி என்பது போர் போன்ற கட்டாயங்கள் வரும்போது மக்கள் நலனுக்காக அறிவிக்கப்படும் நிலை. ஆனால், இந்த நெருக்கடி ஒரு ஜனநாயக ஆட்சியில் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்த அரசு எடுத்துக் கொண்ட அதிகாரங்களை அநீதியான முறையில் அறிவித்ததாகும். அநீதிகள், மக்களுக்கு எதிராக அதிகரிக்கும்போது மக்களின்