பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ கெருக்கடி... - 92 ஆற்றலை, விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும் முகமாகச் சில தலைவர்கள் அந்நாட்களில் செயல்பட்டனர். அதன் விளைவே சட்ட ரீதியான விசாரணையும் தண்டனையும். மக்களைத் தன் அரசுக்கு எதிராகத் துாண்டி விடக்கூடியவர்கள் என்ற கருத்தில், அந்நாட்களில் ஜயப்பிரகாச நாராயணர் போன்ற சர்வோதயத் தலைவர்கள் இரவுக்கிரவே காவல் கைதிகளாயினர். நாடு முழுவதிலும் இந்தச் சர்வாதிகாரச் செயலை எதிர்க்கக்கூடியவர்கள், ஆளுநர், குடியரசுத் தலைவர் போன்றோர் பொம்மைகள் போலச் செயல்பட்டனர். தனிப்பட்ட இயக்கத் தலைவர்கள், இந்து சமயம் என்ற பிரிவில் தீவிரமாக இயங்கிய தொண்டர் அமைப்பு மிக வலிமை வாய்ந்ததாக இருந்தது. மதசார்பற்ற' என்ற கோட்பாடு அவர்கள் அனைவரையும் காவலில் வைத்தது. எதிர்த்த தீவிரவாதிகள் ஈவிரக்கமின்றி, சிறைகளில் கொடுமைப்படுத்தப் பட்டனர். மக்களின் உரிமைக்காகப் பேசும் பொதுவுடமை இயக்கத்தின் ஒருபகுதி, இந்திரா அம்மையின் சாதனைகளைப் பட்டியல் போட்டது. ஆம், யானையைக் குழிகளில் வீழ்த்தப் பள்ளம் தோண்டப்பட்டது தெரியாமல், மேலே பசிய இலை கிளைகளைப் பரப்பி வைப்பார்களே! அப்படி மக்களின் வளர்ச்சிக்காக இருபதம்சத் திட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. 'பேனா பிடிப்பவர்கள் இன்னது தான் எழுத வேண்டும் என்ற கட்டாயம் தெரியாத சலுகை ஆணைகள் பெற்றார்கள். இந்திரா அம்மையை அவர் துணிவை, ஆற்றலை எழுதலாம். அரசின் சாதனைகளைப் பிரசாரம் செய்யும் அரசு வெளியீடுகளில் அவை வெளிவந்தால் ஊதியமும் உண்டு. தமிழ்நாட்டில் இலக்கியம் எழுதிப் பத்துக் காசு பெற இயலாதவர்களுக்கு இது வரப்பிரசாதம் தானே? மேலும் அரசு திட்டங்களுக்கான விளம்பரத்துறை இவர்களைத் தேடிப்பிடித்துப் பல்வேறு பொதுத்துறை நிறுவனங் களின் தொழிற்சாலைகளைச் சென்று பார்க்க வளர்ச்சி பற்றித்தான் நீங்கள் எழுத வேண்டுமென்று சொல்லாமலே, ஒரு சுற்றுலா உபசாரமும் மேற்கொண்டது. அன்றாடம், சோவியத் நாட்டின் பிரசார ஏடுகளும் கண்கவர் படங்கள் கொண்ட வார, மாத இதழ்களும் இந்திய அரசின் நியாயங்களை எடுத்துரைக்கும் பிரசாரங்களும் வெள்ளமென எழுத்தாளர் சிந்தைகளை முற்றுகை யிட்டன. இங்கு இன்னொன்றும் குறிப்பிட்டாக வேண்டும். பொதுவுடமைக் கோட்பாடுகள், அகிம்சைக் கலாசாரங்களில் நாட்டு விடுதலையை முன்நிறுத்திய காந்தியப் பின்னணியில்