பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 93 முதன்மை பெறவில்லை என்றே சொல்ல வேண்டும். அதுவும் நேரு, ஜனநாயக முறையில் நாட்டை ஆளவந்த கேரள - பொது வுடமை அரசை வீழ்த்தி ஜனநாயகக் கொலையை நாட்டில் முதன் முதலாக அரங்கேற்றிய பின் அந்தக் கட்சியே, இரு துண்டாகவும், மேலும் மேலும் தீவிரங்களில் தனிநபர் தலைமைப் பெயர்களைக் கொண்டு ரகசியமாகச் செயல்படத் தொடங்கியபின் பல பகுதி களில் அந்தக் கட்சி மக்களின் செல்வாக்கைப் பரந்த களங்களில் பெறமுடியவில்லை. சீனப்படையெடுப்பு, ஒரு முக்கிய நிகழ்ச்சி. நம் வானொலி, அன்றாடம் சீன எதிர்ப்புப் பிரசாரத்தைக் கிராமங்களில் முழங்கியது. வானொலியின் சினிமாப் பாடல் களைக் கேட்பது உற்சாகத்தைக் கொடுத்தது. தேசபக்தி, அல்லது நாட்டுணர்வு திணிக்கப்பட்டு வருவதில்லை என்பதற்கு இதெல்லாம் படிப்பினை. எந்தெந்தப் பகுதிகள் சீனத்துக்கு உரியவை, எந்தெந்தப் பகுதிகள் இந்திய எல்லைக்குள் இடம் பெற்றிருக்கின்றன என்று அவர்கள் பக்க நியாயங்களை விளக்கும் படங்களும், அறிக்கை களும் எழுத்தாளர் முகவரிகளைத் தேடி வந்தன. ஆனால் அந்த எழுத்தாளர் எவரும் இந்தியாவில், மக்கள் பிரதிநிதிகளாகவோ, 'அரசின் மதிக்கப்படும் குடிமக்களாகவோ மதிக்கப்பட்டதில்லை. தங்கள் பக்க நியாயங்களை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. சீனத்திலிருந்து அனுப்பப் பெறும் பிரசாரம் அரசுக்கு விரோத மானது என்ற அச்சஉணர்வில் அதைப் பிரித்துப் பார்த்து உண்மை யைப் புரிந்துகொள்ளும் ஆர்வமும் முடங்கியது. அத்தகைய எழுத்தாளரை, இந்திரா அரசு, நாட்டுப்பற்று என்பது இந்திராவின் சாதனைகளை மெச்சுவதாகும் என்று அரசியல் உணர்வு பெற ஊக்கியது. இந்திராவைப் பற்றி எழுதினால் அந்த நூல், அனைத்து மொழிகளிலும் வெளியிடப்படும்; ஏன்? 'நாட்டின் சிறந்த தேசிய இலக்கிய விருதும் பெறலாம் என்றெல்லாம் வலை வீசப்பட்டது. அரசியல் கலக்காத, இலக்கிய எழுத்தாளர் என்று மட்டுமே மக்களிடம் செல்வாக்குப் பெறக்கூடிய சூழலே நிலவியது. பின்னர் அரசியல் என்பது அரசியல் கட்சிகள், கட்சித் தலைவர்கள், கட்சிகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாத சினிமாத்துறை என்று அரசியலும், ஜனநாயகமும் மக்களை விட்டு அகன்று அகன்று அவர்களை வெறும் உயிர்களாக, வாக்களிக்கும் சாதனங்களாகவே மாற்றிவிட்டனர். இந்த மந்தையில் பெண்கள் சூனியங்கள்.