பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ கெருக்கடி... 94 ஆனால், 1975 இல் சஞ்சய் காந்தி, இந்திரா அம்மையின் இரண்டாவது மகன். அனைத்து இயக்கங்களுக்கும் திட்டங் களுக்கும் ("சூத்திரதாரி') ஆட்டுவிப்பவன் ஆனான். தன் கையி லெடுத்துக் கொண்ட அதிரடித் திட்டங்களில் மூன்று இன்றும் அவசியமான திட்டங்கள்தாம். அதே விரைவில் அவை செயல் பட்டிருந்தால் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் பல நெருக்கடிகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கலாம் என்றும் சிலர் கருதினர்! இந்தியத் தலைநகரில் சுதந்திரத்துக்குப் பின் தென்னாட்டிலிருந்து இடம் பெயர்ந்த மக்களில் தமிழ் பேசுபவர்கள் அதிகம் எனலாம். மதுரை, சேலம், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்து அதிகமான விவசாயிகள், கைத்தறித் தொழிலாளர்கள் இவர்களில் அடங்குவர். சமுதாயத்துக்கு உணவும், உடையும் அளிக்கும் இந்தப் பெருமக்கள் அலுவலகப் பணிகளிலும் வேறு தொழில் துறைப் பணிகளிலும் இடம்பெயர்ந்து இடைநிலை மாதச்சம்பளம் பெறும் வர்க்கமாக அங்கு தங்கியிருந்த தமிழர் விடுகளில் பணி புரிந்து பொருள் ஈட்டி ஆங்காங்கு குடிசை போட்டுக்கொண்டு தங்கியிருந்தனர். பல மாநிலங்களிலும் இருந்து வேறு வேலையும் தெரியாமல், பெண்களின் வருவாயில் காலம் கழித்த ஆண்கள், குடும்பங்கள் பெருக்கும் பங்களிப்பைத் தவறாமல் செய்தனர். 'கனாட் ப்ளேஸ் போன்ற மையப்பகுதிகளில் மாமன்னர் புழங்கும் இடங்களாக வண்ண வண்ண விரிப்புகளைக் கொண்ட வணிக வளாகங்களும் உணவு விடுதிகளும், பளபளக்கும் வண்டிகளு மாகக் காட்சியளிக்கும் அந்தச் சூழலில் ஒர் அழுக்குத் தமிழ்ப் பெண் கையில் குழந்தையுடன் ஒரு பத்திரிகையைக் காரில் விற்றிருப்பவரிடம் நீட்டிக் காசு வாங்குவார். இது ஏதோ ფაQნ பத்திரிகை மாலைப் பதிப்பாக இருக்கும். சஞ்சய் காந்தியின் கண்களில் இது உறுத்தலாகத் தென் பட்டிருக்க வேண்டும். நகரைச் சுத்தம் செய்து எழில்படுத்தும் திட்டத்தில் குடிசைகள் அப்புறப்படுத்தப்பட்டன. ஆடவர்கள் அனைவரும் கருத்தடைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்தச் சான்றிதழ் பெற்றபின், அவர்களுக்கென்று இருப்பிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டன. பசுமையான மரங்கள், குப்பையகற்றித் துய்மையாக்கும் ஏற்பாடுகள், எழில் விளக்குகள் கட்டப்பட்டன. அலுவலகங்